வியாபம் ஊழல்: நேர்மையான விசாரணை போதும்- அரசின் பண உதவியை நிராகரித்த நிருபரின் குடும்பம்
போபால்: நேர்மையான விசாரணையைத் தவிர தங்களுக்கு வேறு எந்த உதவிகளும் தேவையில்லை என வியாபம் முறைகேடு குறித்து செய்தி சேகரித்த போது மர்ம மரணம் அடைந்த பத்திரிக்கையாளரின் குடும்பத்தார் மத்தியப்பிரதேச முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்தியப் பிரதேச தொழில்கல்வி வாரியத்தில் (வியாபம்) கடந்த 2004ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வியாபம் ஊழல் முறைகேடுகள் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய ஊழல் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த வியாபம் ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய கவர்னர் மகன் தொடங்கி மருத்துவமனை டீன், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் அக்ஷய் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அவரது வயிற்று பகுதி உடல் உறுப்புகள் குறித்த மருத்துவ பரிசோதனையை மத்திய பிரதேசத்திற்கு வெளியே நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த அக்ஷய் சிங்கின் குடும்பத்தாரை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, அக்ஷய் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை தருவதாகவும், மேலும், அவரது குடும்பத்தாருக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்ய மத்தியப் பிரதேச அரசு தயாராக இருப்பதாகவும் சிவராஜ் தெரிவித்தார்.
ஆனால், அதனை மறுத்துவிட்ட அக்ஷய் சிங்கின் குடும்பத்தார், அக்ஷயின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரோக்கியமாக இருந்த அக்ஷய் திடீரென இறந்தது எப்படி, அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்ற உண்மையையும் அரசு கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications