வக்பு சட்ட வழக்கு- அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வக்பு சொத்துகள் மீதான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளவும் நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, வக்பு சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் தலைமையில் இன்று வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் தொடக்கத்திலேயே, மாநில உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு வக்பு வழக்குகளை மாற்றுவது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிபதிகள் இருக்கையில் அமரும் போது எங்களுக்கு மதம் எதுவும் இல்லை- நீதிபதிகளை மதத்துடன் சார்புடையவராக நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்றனர்.
இதனையடுத்து வக்பு சட்டத்துக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, திமுக வில்சன் எம்பி உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றமும் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியது. முஸ்லிம்களின் வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக முடியும் என்றால், இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்கள் உறுப்பினராக முடியுமா? எதற்காக இப்படி ஒரு நடைமுறை என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது
மேலும், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து உத்தரவுகளுக்கும் நாளை வரை இடைக்கால த்டை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல வக்பு சொத்துகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது; வக்பு சொத்துகளை வகைப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் நடைபெற உள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications