ஷீனாவை கொலை செய்ய ஸ்கைப் மூலம் திட்டமிட்ட கேடிகள் இந்திராணி, கன்னா
மும்பை: ஷீனா போராவை கொலை செய்ய இந்திராணி ஸ்கைப் மூலம் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து ஷீனாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் ஷீனாவை கொலை செய்ய எப்படி திட்டமிட்டார்கள் என்பதன் விவரம் தெரிய வந்துள்ளது.
போனில் பேசினால் கண்டுபிடித்துவிடக்கூடும் என்பதால் இந்திராணியும், கன்னாவும் ஸ்கைப் மூலம் பேசி ஷீனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஷீனாவை கொல்ல 3 திட்டம் தீட்டியுள்ளனர். அதில் ஒன்றை தான் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு இந்திராணியும், கன்னாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் தொடர்பிலேயே இருந்துள்ளனர். ஷீனாவை கொலை செய்த முன்பும், பின்பும் தினமும் 10 முதல் 12 முறை வரை இந்திராணியும், கன்னாவும் போனில் பேசியது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications