இந்திய வீரர்கள் மீது சரமாரி கற்களை வீசி தாக்குதல் நடத்தும் சீனா ராணுவம்- அதிர்ச்சி வீடியோ
லடாக்கில் நமது ராணுவ வீரர்கள் மீது சீனா ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன வீரர்கள், நமது வீரர்களை நோக்கி சரமாரி கற்களை வீசிய வீடியோ வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையில் உள்ள பாங்காங் ஏரி சீனாவின் எல்லை வரை இருக்கிறது. இந்த ஏரியில் பெரும்பகுதி நமக்கு சொந்தமானது. சிறிய அளவில்தான் சீனாவுக்கு சொந்தம்.

அத்துமீறிய சீனா
இப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கமான நடவடிக்கை. கடந்த 15-ந் தேதியன்று சுதந்திர தின நாளில் சீன ராணுவத்தினர் பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி நமது எல்லைக்குள் நுழைந்தனர்.

கற்கள் வீசி தாக்குதல்
இதை நமது வீரர்கள் தடுத்த போது சீன ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு நமது தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இது தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நமது வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கற்களை வீசுவதும் அதற்கு பதிலடி தருவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சிறு காயங்கள்
இம்மோதலில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. பின்னர் சீன ராணுவ வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
விரட்டியடிப்பு
லடாக் பகுதியில் கடந்த வாரம் 2 முறை சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவ முயற்சித்தது. ஆனால் இதை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.












Click it and Unblock the Notifications