தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? உங்களை நம்ப போவது இல்லை.. குஜராத் அரசை வெளுத்த ஹைகோர்ட்
ராஜ்கோட்: குஜராத்தில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பறிபோகியது. இந்நிலையில், இந்த வழக்கை தாமாக எடுத்து விசாரித்து குஜராத் ஹைகோர்ட், மாநில அரசை சரமாரியாக விமர்சித்தது. நீங்களும் (அரசு) அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. தூக்கத்தில் இருந்தீர்களா? என விமர்சித்தது.
குஜராத் மாநிலத்தின், ராஜ்கோட் நகரில் 'டிஆர்பி கேம்’ என்ற பெயரில் மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கம் உள்ளது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விளையாட்டு அரங்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்த விளையாட்டு அரங்கில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு அரங்கம் முழுவதும் பரவியது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 9 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என பலரும் விளையாட்டு திடலுக்கு வருகை தந்து இருந்தனர். தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடியும், உணவு விடுதிகளுக்கு சென்று உணவுகளை ருசித்தும் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்றிதழை விளையாட்டு மண்டலத்தை நடத்தி வந்த நிறுவனம் பெறவில்லை என்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி இரண்டரை ஆண்டுகளாக ஆர்.ஆர் கேமிங் ஜோன் நிறுவனம் இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. தீ அணைப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் எப்படி இவ்வளவு பெரிய விளையாட்டு அரங்கு இயங்கி வந்தது என்பது விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே டிஆர்பி கேமின் ஜோன் நிறுவனத்தை சேர்ந்த 6 பேர் மீது ராஜ்கோட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யபட்டுள்ளனர். 4 பேர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைப்ற்று வருகிறது.

இந்த நிலையில், நாட்டையே அதிர வைத்த இந்த விளையாட்டு திடல் தீ விபத்து விவகாரத்தை தாமாக முன்வந்து குஜராத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. விசாரணையின் போது, உரிய அனுமதியின்றி இரண்டரை ஆண்டுகளாக ஆர்.ஆர் கேமிங் ஜோன் நிறுவனம் இயங்கி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காற்றில் பறக்கவிடப்பட்ட விதிகள்.. 28 பேரை காவு வாங்கிய குஜராத் தீ விபத்து.. திடுக்கிட வைக்கும் தகவல்
இதையடுத்து, குஜராத் அரசை கடுமையாக சாடிய உயர் நீதிமன்றம், இரண்டரை ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டு இருந்தீர்கள் என நாங்கள் கருத வேண்டுமா? நீங்களும் (அரசு) அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. அதிகாரிகள் எல்லாம் அங்கே விளையாட சென்றார்களா? தூக்கத்தில் இருந்தீர்களா? இப்போது நாங்கள் அரசையும் உள்ளூர் நிர்வாகத்தையும் நாங்கள் நம்ப போவது இல்லை.
ராஜ்கோட் விபத்தை தொடர்ந்து குஜராத்தில் உள்ள அனைத்து விளையாட்டு திடல்களூம் உரிய விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications