அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்- சோனியா
டெல்லி: சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 3 முக்கிய பாஜக தலைவர்களின் ராஜினாமாவைக் கோரி தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் காங்கிரஸ் கட்சி தனது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. அவர்கள் எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் அவதூறாகப் பேசட்டும். எங்களுக்குக் கவலை இல்லை. எங்களது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா, சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை காங்கிரஸ் கட்சி ஸ்தம்பிக்க வைத்தது. காங்கிரஸாரின் போராட்டத்தால் இரு அவைகளும் முடங்கிப் போயின.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பொகாடியா உள்ளிட்டோரை மையமாக வைத்து பாஜக தரப்பிலிருந்து தாக்குதல்கள் கிளம்பியுள்ளன. இந்தப் பின்னணியில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எங்களது போராட்டம் தொடரும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். எங்களுக்குக் கவலை இல்லை என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகையில், 3 பேரும் ராஜினாமா செய்தாக வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் நடத்த அனுமதிப்போம். இதை நிபந்தனையாகவே கூறுகிறோம் என்றனர்.
லோக்சபாவைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு 44 எம்.பிக்கள்தான் உள்ளனர். இருப்பினும் அது ஆவேசமாக போராடி வருகிறது. ராஜ்யசபாவில் பாஜக மைனாரிட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு அமளி சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸின் கையை நம்பி உள்ளது பாஜக. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அக்கட்சி உள்ளது. அதேசமயம் இறங்கி வரவும் அது தயாராக இல்லை.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications