நீதிமன்றத்திற்கு நன்றி.. நாளை பெரும்பான்மையை நிரூபிப்போம்.. குலாம் நபி ஆசாத் நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ

  டெல்லி: கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய தீர்ப்பு குறித்து தற்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் பேட்டி அளித்துள்ளார். நாளை மாலை நாங்கள் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

  கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்து முடிந்துள்ளது.. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

  We will prove our majority in the assembly reacts, Gulam Nabi Azad on SC verdict.

  இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

  இந்த தீர்ப்பு குறித்து தற்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் பேட்டி அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

  பாஜக உரிமை கோருவதற்கு முன்பே, நாங்கள் கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க உரிமை கோரி கர்நாடக ஆளுநரை இருமுறை சந்தித்தோம். ஆனால் அவர் எங்கள் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது முடிவிற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் கர்நாடகாவில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை.கோவா, மணிப்பூர், மேகாலயாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. பொதுவாக பெரும்பான்மை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கும் நிலையில், எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கியது ஏன் என்று தெரியவில்லை.

  நீதிமன்றம் இதில் மிகவும் நேர்மையாக செயல்பட்டுள்ளது. நாளை மாலை நாங்கள் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  SC verdict has upheld constitutional morality&democracy. We will prove our majority in the assembly reacts, Senior Congress leader Gulam Nabi Azad on SC verdict.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற