For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“நேபாளத்தின் வலி இந்தியாவின் வலி”...: ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: நேபாளத்தின் வலி, இந்தியாவின் வலி. எனவே, நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள நேபாள மக்களின் கண்ணீரையும் நாம் துடைப்போம்' என மான் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் "மான் கி பாத்" என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

'We Will Wipe the Tears of Every Person in Nepal,' says PM Modi in 'Mann ki Baat': Highlights

அதில் அவர் கூறியதாவது :-

"நேபாளத்தின் வலி இந்தியாவின் வலி. 2001-ம் ஆண்டு குஜராத் நிலநடுக்கத்தின் போது 'கட்ச்' பகுதியில் நான் இருந்திருக்கிறேன். நிலநடுக்கத்தின் கொடூரத்தை என்னால் இயல்பாகவே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. தற்போது நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியே முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். அங்குள்ள அனைத்து மக்களின் கண்ணீரை துடைக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்." என்றார்.

மேலும் 'சேவையே நமது தலையாய கடமை' என்று தனது உரையில் குறிப்பிட்ட மோடி உலக நாடுகளில் இந்தியாவின் பங்கு இது தான் எனத் தெரிவித்தார்.

English summary
Prime Minister Narendra Modi referred to the Nepal earthquake and India's role in relief and rescue operations among other issues in his monthly 'Mann ki Baat' radio address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X