குஜராத்தில் வேவு பார்க்கப்பட்ட இளம் பெண்ணுடன் நரேந்திர மோடி- புகைப்படங்கள் வெளியாகின!!
அகமதாபாத்: குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவினால் வேவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணும் மாநில முதல்வர் நரேந்திர மோடியும் உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை குலைல் இணையத்தளம் வெளியிட்டிருக்கிறது.
குஜராத் அமைச்சராக அமித்ஷா உத்தரவுப்படி பெங்களூரைச் இளம்பெண் ஒருவர் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். அவர் போகும் இடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. அவர் யார் யாருடனெல்லாம் பேசுகிறார் என்றெல்லாம் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் அமித் ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டும் வந்தது.
அமித் ஷாவோ, தமது சாகிபுக்காகத்தான் இந்த உளவு வேலையை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கான ஆதாரங்களான அமித்ஷாவும் குஜராத் காவல்துறை அதிகாரி சிங்காலும் பேசுகிற தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமித் ஷா குறிப்பிடும் சாகிபு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி குஜராத் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் 2005ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் நரேந்திர மோடி, சர்ச்சைக்குரிய இளம்பெண் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் ஷர்மா மூவரும் உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை குலைல் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் கட்ச் பிரதேசத்தில் விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த குடில்களில் மோடி இருந்த போது இந்த இளம்பெண்ணும் அங்கு இருந்ததாக பிரதீப் சர்மா தமது மனுவில் கூறியிருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications