என்னது சோத்துல சாம்பாரா? மட்டன் - மீன் கேட்டு மணப்பெண் குடும்பத்துக்கு அடி-உதை.. களேபரமான திருமணம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண விழாவில் மீன் மற்றும் அசைவ உணவுகள் வழங்காததால் மணப்பெண்ணின் குடும்பத்தினரை மணமகன் வீட்டார் அடித்து உதைத்த வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் அபிசேக் சர்மா. இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆனந்த் நகர் கிராமத்தில் திருமண ஊர்வலம் தொடங்கியது.

மணமகன் அபிசேக் சர்மா தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் மணப்பெண்ணை கரம்பிடிக்க புறப்பட்டார். அதன்பிறகு திருமணம் நடக்கும் இடத்துக்கு அவர்கள் சென்றனர். அதன்பிறகு திருமண சடங்குகள் தொடங்கின.
அபிசேக் சர்மா, மணப்பெண்ணின் கழுத்தில் மாலை அணிவித்தார். மணப்பெண்ணும், அபிசேக் சர்மாவிற்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு உறவினர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவில் பன்னீர், புலாவ், சாதம், சாம்பார் உள்பட பல்வேறு வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. ஆனால் மணமகன் குடும்பத்தினர் சைவ உணவுகளை விரும்பவில்லை. இதனை பெரிய புகாராக மணப்பெண் வீட்டாரிடம் எடுத்து சென்றனர்.
ஏன் மீன், மட்டன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை தயார் செய்யவில்லை? என்று கேள்வி கேட்டனர். அதற்கு மணப்பெண் வீட்டார், மணமகன் வீட்டாரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அபிசேக் சர்மாவின் குடும்பத்தினர் சமாதானம் அடையவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஏற்படவே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்க தொடங்கினர்.
இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். ஒருவரையொருவர் மிதித்தனர். அங்கு போடப்பட்டு இருந்த சேரை தூக்கி அடித்தனர். இதனால் சேர்கள் காற்றில் பறந்தன. சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த சண்டை காட்சிகள் இருந்தன. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் இருதரப்பினரின் சண்டையையும் நிறுத்தினர். மேலும் திருமணமும் நிறுத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி மணப்பெண்ணின் தந்தை அளித்த புகாரில், ‛‛அசைவ உணவு பரிமாறப்படவில்லை என்பதால் மணமகன் அபிசேக் சர்மா மற்றும் அவரது தந்தையினர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வேளையில் அவர்கள் என்னையும், எனது உறவினர்களையும் தாக்கி விட்டனர். கட்டையால் தாக்கினர். மிதித்தனர்.
வரதட்சணையாக கார் வாங்க ரூ.4.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வரதட்சணை பணத்தை திரும்ப வாங்கி தர வேண்டும். அதேபோல் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே அவர்கள் இருதரப்புக்கும் இடையே நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications