என்னது 'பரமாத்மா'வே தியானம் செய்வதா? கேமராவோடு மட்டும் போகட்டும்.. மோடியை எச்சரித்த மமதா பானர்ஜி!
கொல்கத்தா: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெறும் நிலையில் மோடி தியானம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் கன்னியாகுமரி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மனு தந்துள்ளது.
மேலும் தமிழர்களை திருடர்கள் என ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு எதிராக மோடி வருகையின் போது கறுப்புக் கொடி காட்டுவோம் என அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மோடியின் தியானம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருப்பதாவது: தியானம் செய்யப் போகிற யாராவது கேமராவுடன் போவார்களா? தியானம் செய்வதை யாராவது வீடியோ எடுப்பார்களா? வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரம் முன்னதாக தியானம் செய்ய நினைத்தால் ஏசி ரூமில் போய் தியானம் செய்ய வேண்டியதுதானே?
மோடியின் தியானம் தொடர்பாக எந்த கட்சியும் ஏன் பேச மறுக்கின்றன. விவேகானந்தர் தியானம் செய்த இடம் என்பதால் மோடியும் தியானம் செய்யப் போகிறேன் என்கிறாரே.. மோடிதான் தன்னை பரமாத்மா என்கிறாரே.. அப்புறம் எதற்காக தியானம் செய்கிறாராம்?
மோடியின் தியானத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம். அது அப்பட்டமான தேர்தல் நடத்தை மீறலாகும். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications