மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா... தொடர் விலகலால் காங். கட்சிக்கு நெருக்கடி
கொல்கத்தா: காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா இப்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து காங்கிரசின் தலைவர் ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரையடுத்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் காரியக் கமிட்டிகள் கலைக்கப்பட்டன.

கடந்த 7 -ம் தேதி மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்வதாக சோமன் மித்ரா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததுமே இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் மேற்கு வங்க மாநிலத் தலைவர்கள் இதற்கு உடன்படவில்லை. இதனால் சோமன் மித்ரா அமைதியாக இருந்தார்.
இப்போது ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் சோமனும் தனது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிடமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. சோமன் மித்ரா ராஜினாமா கடிதத்தை அனுப்பியதும் மேற்கு வங்க காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கவுரவ் கோகாய், சோமனை சந்தித்து பேசினார்.
அவரை சமாதானப் படுத்திய கவுரவ் கோகாய் சோமனிடம் புதிய தேசியத் தலைவர் தேர்வு செய்து அதன் பின்னர் மாநிலக் கமிட்டிகளை மாற்றி அமைக்கும்போது மாநிலத் தலைவர்களின் ராஜினாமா, மற்றும் அவர்களின் மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும் அதுவரை தாங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று சோமனிடம் மேற்கு வங்க மேலிடப் பார்வையாளரான கவுரவ் கோகாய் கூறியுள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications