அவ்வளவு தான்.. மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி க்ளோஸ்.. எல்லா எக்சிட் போல்களும் சொல்வது ஒன்றை தான்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போல்களில் பெரும்பாலான சர்வேக்கள் பாஜகவே வெல்லும் என கூறியுள்ளது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா தோல்வி அடைவார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் இந்த தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும என்பது குறித்து நாம் பார்க்கலாம்

மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைந்துள்ள நிலையில், முன்னணி நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அதில் பெரும்பாலான கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால சாம்ராஜ்யம் கடும் சோதனையைச் சந்தித்துள்ளது. மேற்கு வங்க எக்சிட்போல் முடிவுகள் சொல்வது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

Exit Poll Results

மேற்கு வங்கம்

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த மேற்கு வங்கத் தேர்தல் போர்க்களம் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. கடந்த வாரம் முதலாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள், மம்தாவுக்கும் அவரது தொண்டர்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்துளளது. மேற்கு வங்கத்தில் இந்த முறை 'தாமரை' மலர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன.

சர்வேக்கள்

பெரும்பாலான எக்சிட் போல் நிறுவனங்கள் பாஜக மெஜாரிட்டி மார்க்கான 148-ஐ அசால்ட்டாகக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளன.

சாணக்யா ஸ்ட்ரேட்டஜிஸ் (Chanakya Strategies): பாஜக 150 - 160 இடங்களைப் பிடித்து மெஜாரிட்டியைத் தொடும்.

பி-மார்க் (P-MARQ): பாஜக-வுக்கு 150 - 175 இடங்கள் வரை கிடைக்கும் என கூறியுள்ளது.

மேட்ரைஸ் (Matrize): பாஜக 146 - 161 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Matrize & போல் டைரி (Poll Diary): இவர்களும் பாஜக-விற்கே முன்னுரிமை அளித்துள்ளனர்.

முட்டுக்கட்டை

'பீப்பிள்ஸ் பல்ஸ்' (Peoples Pulse) நிறுவனம் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் 177 - 187 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கூறியுள்ளது. மற்ற அனைத்து சர்வேக்களும் போட்டி மிக மிக நெருக்கமாக இருக்கும் என்றும் பாஜக அதில் வெல்லும் என்றும் தெரிவிக்கிறது... 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சில விஷயங்கள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

காரணம்

1. 15 ஆண்டுகால ஆட்சி எதிர்ப்பு: ஒரு கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும்போது ஏற்படும் இயல்பான அதிருப்தி இந்த முறை மம்தாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மட்டத்திலான ஊழல் புகார்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளன.

2. SIR விவகாரம்: தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (SIR) மூலம் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நீக்கம் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

3. பெண்கள் பாதுகாப்பு & வேலைவாய்ப்பு: மம்தாவின் பலமாக இருந்த பெண்கள் வாக்கு வங்கியில், சமீபத்திய சில குற்றச் சம்பவங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளது.

இருப்பினும், இந்த எக்சிட் போல்களை அப்படியே இறுதி முடிவாக கருத முடியாது.. 15 ஆண்டுகால தீதியின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படுமா அல்லது கணிப்புகளைத் தகர்த்து மம்தா மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர்வாரா என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+