மோப்பம் பிடிப்பதில் கில்லாடிகள்.. பின்லேடனை பிடித்த நாய்களுக்கு மேற்கு வங்க காவல்துறையில் வேலை!
கொல்கத்தா: மோப்பம் பிடிப்பதில் பலே கில்லாடிகளான பின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மேலினாய்ஸ் இன நாய்களுக்கு மேற்கு வங்க போலீசார் வேலை கொடுத்துள்ளனர்.
அமெரிக்க ராணுவத்தில் பெல்ஜியன் மேலினாய்ஸ் வகை நாய்கள் மோப்ப பிரிவில் இடம் பெற்றுள்ளன. அவை தான் உலகை அச்சுறுத்தி வந்த அல் கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதி ஆகியோரை பிடிக்க அமெரிக்க ராணுவத்துக்கு உதவின.

நன்றியுள்ள ஜீவனான நாய்களுக்கு இயற்கையாகவே மோப்ப சக்தி அதிகம், குண்டு வெடிப்பு சம்பவங்கள் , கொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, திருடன்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்களில் நாய்கள் சிறப்பான பணியினை செய்து வருகின்றன.
இதனால் உலகம் முழுவதும் காவல்துறையில் மோப்ப படை பிரிவு ஒன்று நாய்களுக்காகவே செயல்படுகிறது. இந்நிலையில் மோப்பம் பிடிப்பதில் பலே கில்லாடிகளான பின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மேலினாய்ஸ் இன நாய்களை தங்கள் படையில் சேர்க்க கொல்கத்தா காவல்துறை முடிவு செய்துள்ளது.
கொல்கத்தா தலைமை செயலகம் அருகே 'நபானா' என்ற பெயிரல் புதிய மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வெளியில் பயிற்சி பெற்ற பெல்ஜியன் மேலினாய்ஸ் நாய் ஒன்று ஏற்கனவே இப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. கூடுதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து சேர்க்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெல்ஜியன் மேலினாய்ஸ் நாய்கள் இனி பயன்படுத்தப்பட உள்ளன. தற்போதைய நிலையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பெல்ஜியன் மேலினாய்ஸ் நாய்களை தங்கள் பிரிவில் வைத்துள்ளனர். இந்த நாய்களை மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் படைப்பிரிவில் சேர்க்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications