இன்று கர்நாடகா பந்த்.. எவையெல்லாம் இயங்கும்? எவையெல்லாம் முடங்கும்? #karnatakabandh
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, கன்னட சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற உள்ளது. அன்றைய தினம் எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது என்பது குறித்த ஒரு பார்வை இதோ:
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பந்த்துக்கு, 1100 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். பெங்களூர் டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா கூறுகையில், சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்களிடம் இதுகுறித்து முன்கூட்டியே தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.

கர்நாடக பந்த்திற்கு மாநில அரசு ஊழியர் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று 'மாஸ் லீவு' எடுத்து பந்த்துக்கு ஆதரவு அளிக்கிறது அரசு ஊழியர் சங்கம். பெங்களூரில், டவுன்ஹால் பகுதியில் இருந்து ஃப்ரீடம் பார்க் வரையில், மாட்டு வண்டி பேரணி நடத்த உள்ளது அரசு ஊழியர் சங்கம்,
பெட்ரோல் பங்க் சங்கம், ஹோட்டல் சங்கத்தினரும் பந்த்துக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. தனியார் பள்ளி கூட்டமைப்பும் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகா முழுக்க எந்தெந்த சேவைகள் கிடைக்காது, எவையெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த ஒரு பார்வை:
- பெங்களூரிலுள்ள 450 பெட்ரோல் பங்க் உட்பட மாநிலம் முழுக்க உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான பெட்ரோல் பங்குகள் மூடப்படுகிறது.
- வங்கி ஊழியர் சங்கம் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே வங்கி ஊழியர்கள் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளதால், வங்கி சேவை முடங்கும்.
- பெங்களூர் நகர பஸ்கள், கர்நாடக அரசு பஸ்கள் இயங்காது.
- பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து முடங்கும்.
- தியேட்டர்களில் சினிமா ஷோக்கள் ரத்து செய்யப்படும்.
- ஹோட்டல், ரெஸ்டாரண்டுகள் மூடப்படும்.
- பள்ளி, கல்லூரிகள் இயங்காது.
- மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருக்கும்.
- வங்கி, அஞ்சல் அலுவலகம், இன்சூரன்ஸ் துறை முடங்கும்.
வழக்கம் போல இயங்க கூடிய சேவைகள் எவை தெரியுமா?
- மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவை
- ரயில் போக்குவரத்து
- மெடிக்கல் ஷாப்கள்
- செய்தித்தாள்கள், பால் வினியோகம்.
இவையெல்லாம் பாதிக்கப்படாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications