தியானத்தின் போது கடவுளிடம் வேண்டியது என்ன? மோடியின் விளக்கம் இதுதான்!
கேதார் நாத்தில் தியானம் செய்த போது கடவுளிடம் வேண்டியது என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கேதார்நாத்: கேதார் நாத்தில் தியானம் செய்த போது கடவுளிடம் வேண்டியது என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பயணம் சென்றுள்ளார்.
நேற்று மோடி கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு இரவு முழுக்க 17 மணி நேரம் தியானம் செய்தார். அதன்பின் இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மோடி பேசினார்
கேள்விகளை எதிர்கொள்ளாமல் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இந்த பயணம் மிகவும் இனிமையாக இருக்கிறது. நம் நாட்டு மக்கள் வெளிநாட்டிற்கு சென்று சுற்றிபார்க்கலாம். அதே போல் உள்நாட்டிலும் அவர்கள் நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும். நம் நாட்டில் நிறைய அழகான விஷயங்கள் உள்ளது.

கேதார்நாத் எப்படி
எனக்கும் கேதார்நாத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. 2013 வெள்ள சேதத்திற்கு பின் இங்கு நிறைய மாறி உள்ளது. நாங்கள் இந்த இடத்தை நிறைய முன்னேற்றி இருக்கிறோம். மக்கள் இப்போது இங்கு எளிமையாக வந்து வழிபாடு நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாள் எப்படி
இரண்டு நாள் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் சொன்னதற்கு நன்றி. எனக்கு கொஞ்சம் ஓய்வு எடுக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த இடத்தில் தொலைத்தொடர்பே இல்லை. ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே இருக்கிறது. அதன் வழியாக கோவிலை பார்த்து வருகிறேன்.

என்ன கேட்டார்
நான் கடவுளிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கு பொதுவாக வேண்டுதலில் எதையும் கேட்கும் பழக்கம் இல்லை. நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று கேட்கவில்லை. கடவுள் நமக்கு நிறைய சக்திகளை கொடுத்து இருக்கிறார். மக்கள் எல்லோரையும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று மட்டும் வேண்டினேன், என்று குறிப்பிட்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications