"சீதா, அக்பர்".. சிங்கங்களுக்கு பெயர் சூட்டியதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?.. நீதிபதி காட்டம்
கொல்கத்தா: சிங்கத்திற்கு சீதா என பெயர் சூட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என விஷ்வ இந்து பரிஷத் தொடர்ந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் எனும் இந்து அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்து அந்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 12 ஆம் தேதி விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக திரிபுராவின் செபாஹிஜாலா உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்கள், 8 விலங்குகளுடன் சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.
அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்பர் என்பது முகலாய மன்னரின் பெயராகும். சீதா என்பது ராமாயணத்தில் ஸ்ரீராமனின் மனைவி சீதா தேவியின் பெயராகும். எனவே இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம்.
சிங்கத்திற்கு இந்து மத தெய்வமான சீதையின் பெயரை வைத்திருப்பது பகுத்தறிவற்றது, நியாயமே இல்லை, மூர்க்கத்தனமான வகையில் பெயரிட்டு மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்கள். நாளைக்கு கழுதைக்கு வேறு ஒரு தெய்வத்தின் பெயரை வைப்பர். எங்கள் சீதாதேவியை கோவிலில் வழிபட வேண்டும். அடர்ந்த காடுகளில் அல்ல.
மத தெய்வங்களின் பெயரை விலங்குகளுக்கு பெயரிடுவது புனிதமற்றது என இந்து அமைப்பு தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இதை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சாரியா விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில் சிங்கத்திற்கு பெயர் வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது ஒவ்வொரு நபரின் எண்ண ஓட்டத்தை பொருத்ததாகும்.
துர்கையின் வாகனமாக இருக்கும் சிங்கத்தையும் துர்கா பூஜையின் போது அனைவரும் வழிபடுகிறார்கள். துர்கையின் காலடியில் சிங்கம் இருப்பதை நீங்க பார்த்துள்ளீர்களா இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விஎச்பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துர்கையின் பாதங்களில் சிங்கம் இருப்பது அனைத்து பகுதியில் இருந்தும் கெட்ட சக்திகளை தடுப்பதற்காகத்தான். அதற்கென எந்த பெயரையும் வைத்து அழைப்பதில்லை.
நீங்கள் சொல்வது போல் இல்லை. துர்கா பூஜையின் போது நாங்கள் வழிபடுவது துர்க்கையை மட்டும்தான். சிங்கத்தை அல்ல என்றார். இதற்கு நீதிபதி சவுகதா பதிலளிக்கையில் நீங்கள் வழிபடாவிட்டாலும் அந்த ஒட்டுமொத்த பூஜையிலும் சிங்கம் இருக்கிறதே! சிங்கத்திற்கு சீதா என்ற பெயரை வைத்ததால் உங்களுக்கு என்ன பிரச்சினை, இதனால் எப்படி மத உணர்வு புண்படும்? அன்பின் பெயரில் கூட அந்த பெயரை வைத்திருக்கலாமே என நீதிபதி சவுகதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications