For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளிக்கும்போது பாத்ரூமுக்குள் நுழைந்து.. அலறிய பெண்.. ஒரு ராணுவ அதிகாரி செய்ற காரியமா இது.. கர்மம்!

பாத்ரூமில் குளிக்கும்போது பாலியல் தொல்லை தந்துள்ளார் ராணுவ வீரர் ஒருவர்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஒரு அதிகாரி செய்ற காரியமா இது? ஒரு பெண்மணி குளிக்கும்போது, அவர் வீட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து..? அப்படியே ஷாக் ஆகி விட்டது ராஜஸ்தான் மாநிலம்..!

ராஜஸ்தானின் ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இந்த குடியிருப்பில் ஏராளமான ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

அந்த வகையில் வீரரின் மனைவி ஒருவர் போலீசில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 சுபேதார் அந்தஸ்து

சுபேதார் அந்தஸ்து

அந்த புகாரில், நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாயங்காலம் வீட்டில் குளித்து கொண்டிருந்தேன்.. அப்போது, ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் வந்தார்.. வீட்டில் யாருமில்லை என்று நினைத்து, பாத்ரூமுக்குள் நுழைந்து என்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்தார்.. நான் அலறி சத்தம் போடவும், வீட்டிற்குள் இருந்த கணவர் ஓடிவந்தார்.. பிறகு இருவரும் அந்த உயரதிகாரியை பிடிக்க முயன்றபோதும், அவர் தப்பியோடி விட்டார்.. அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

விசாரணை

விசாரணை

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.. இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி பரத் ராவத் சொல்லும்போது, தம்பதி இருவருமே சம்பவம் நடந்ததுமே ராணுவ உயரதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.. ஆனால், அவர்கள், இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதுடன், சம்பந்தப்பட்ட தம்பதியையும் மிரட்டி உள்ளனர்...

 மிரட்டல்

மிரட்டல்

அவர்களை வெளியே வரவிடாமல் வீட்டிலேயே முடக்கிவைத்திருக்கிறார்கள்.. இதையும் அந்த புகாரில் சொல்லி இருக்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், பிறகு அதை மூடி மறைக்க உதவிய மற்ற 4 உயரதிகாரிகளின் பெயர்கள் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.. அந்த பெண், தங்களுக்கு ஏதேனும் நடந்தால் அந்த 5 பேர்தான் காரணம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளதால், விசாரணையை துவங்கி உள்ளோம் என்றார்.

 ராணுவ வீரர்

ராணுவ வீரர்

இதுபற்றி பாதுகாப்பு துறை செய்தி தொடர்பு அதிகாரி அமிதாப் சர்மா சொல்லும்போது, ஜோத்பூர் ராணுவ நிலையத்தில் தங்கியுள்ளார்.. ராணுவ வீரரின் மனைவி, பணியில் உள்ள மற்றொரு வீரர் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு எதிராக எப்ஐஆர் பதிவில் கூறியுள்ள, கடுமையான குற்றச்சாட்டுகள் மீது இந்திய ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார். தம்பதி இருவரும் போன் மூலம் போலீசில் புகார் கொடுத்ததாக தெரிகிறது. எனினும், இந்த வழக்கில் நான்கு ராணுவ உயரதிகாரிகளின் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதால், அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

English summary
what happended to Army soldiers wife and rajansthan police enquiry is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X