ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்காக நிதிஷ் குமார் முதுகில் குத்தும் லாலன் சிங்? உடைக்கப்படும் ஜேடியூ?
பாட்னா: தமக்கு ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முதுகில் குத்தி ஐக்கிய ஜனதா தளம் கட்சியை (ஜேடியூ) உடைக்க தயாராகிவிட்டார் அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் லாலன் சிங் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
வட இந்திய அரசியலில் இப்போது பேசுபொருளாக இருப்பது நிதிஷ் குமாரின் "ஆபரேஷன் லாலன்". பீகாரில் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக ஜேடியூ கட்சியில் சலசலப்புகள் வெடித்தன.

ஜேடியூவின் தேசிய தலைவராக இருந்த லாலன் சிங், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் இணைந்து முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமாரை அகற்ற சதி செய்கிறார் என்பதுதான் இந்த சலசலப்பின் மையம். இதனையடுத்து லாலன் சிங்குக்கு எதிரான நடவடிக்கைகளை நிதிஷ் குமார் தொடங்கியதுதான் 'ஆபரேஷன் லாலன்'. இதன் ஒரு பகுதியாகவே ஜேடியூ தேசியத் தலைவர் பதவியில் இருந்து லாலன் சிங் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு அவருக்கு பதில் நிதிஷ்குமார், ஜேடியூவின் தேசியத் தலைவராக பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
ஆனால் ஜேடியூவில் உள்ள லாலன் சிங்கின் 12 ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஆர்ஜேடி பக்கம் தாவக் கூடும் அல்லது நிதிஷ் குமாருக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என கூறப்பட்டு வருகிறது. அப்படி செய்தால் தற்போதைய துணை முதல்வரான ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், முதல்வராக முடியும் என ஒரு அஜெண்டா செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேஜஸ்வி யாதவை தாம் முதல்வராக்கினால் தம்மை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஆர்ஜேடி முன்வர வேண்டும் என்பதுதான் லாலன்சிங்கின் பேரமாம்.
லாலன் சிங், அவரது ஆதரவு 12 எம்.எல்.ஏக்களின் ஆலோசனைகளால் பீகார் அரசியலில் எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலைமை உள்ளது. இந்த நிலையில் இன்று ஆர்ஜேடி நிறுவனத் தலைவர் லாலு பிரசாத் யாதவை பீகார் சபாநாயகர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் தேஜஸ்வி யாதவும் தமது ஆஸ்திரேலியா பயணத்தை ரத்து செய்துவிட்டு பாட்னாவிலேயே முகாமிட்டிருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
ஒரே ஒரு எம்பி பதவிக்காக!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications