மூணாறில் மும்பை பெண் ஜாலி சுற்றுலா .. கசப்பான அனுபவம் .. டாக்சி டிரைவர்கள் 3 பேர் கைது
மூணாறு: கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மூணாறுக்கு மும்பையை சேர்ந்த பெண் அண்மையில் சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு டாக்சி டிரைவர்களால் கசப்பான சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த மும்பை பெண் வீடியோ வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இந்த விவகாரத்தில் 3 டாக்சி டிரைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

கேரள மாநிலம் மூணாறு இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. கேரளாவிற்கு வரும் பலரும் மூணாறு சுற்றுலா செல்வது வழக்கம். மூணாறில் தேயிலை தோட்டங்கள், மனதை மயக்கும் அழகிய காடுகள் , ஏராளமான வனவிலங்குகள் ஆண்டு முழுவதும் குளுகுளுடன் காலநிலை மிக அழகான சாலைகள் என அற்புதமாக இருக்கும். கடவுளின் தேசமான மூணாறில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் சுற்றுலாவிற்காக வருகிறார்கள் . அப்படித்தான் மும்பையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஜான்வி கடந்த அக்டோபர் 30-ந்தேதி கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் வாடகை கார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் வாடகை காரன் முன்பதிவு செய்த சிறிது நேரத்தில் அவரை ஏற்றிச்செல்வதற்காக கார் அங்கு வந்தது. அப்போது அங்கு மூணாறை சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சிலர் வந்து, ஜான்வியிடம் ஆன்லைன் மூலம் வாடகை கார் பதிவு செய்து பயணம் செய்யக்கூடாது என்று கடுமையாக வாக்குவாதம் செய்தார்களாம்., மூணாறை சேர்ந்த டாக்சி கார்கள் மூலமே செல்ல வேண்டும் என்று கூறி அவரை மிரட்டினார்களாம். இதனால் பயந்து போன அவர், , மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு 2 காவலர்கள் வந்தனர். ஆனால் அவர்களும், மூணாறு டாக்சி கார் டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர், ஒரு வழியாக ஜான்வி அவர் ஆன்லைனில் பதிவு செய்த வாடகை காரில் எர்ணாகுளம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் மும்பை திரும்பினார். இதற்கிடையே ஜான்வி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்தார். அதில், மூணாறில் எனக்கு டாக்சி டிரைவர்களால் கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக நடந்த சம்பவங்களை விரிவாக விவரித்தார்.. இதுபோல் அச்சுறுத்தல் இனி யாருக்கும் நடக்க கூடாது. இனிமேல் நான் கேரளாவுக்கு ஒருபோதும் சுற்றுலா வரமாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஜான்வியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் சாஜூ பவுலோஸ், காவலர் ஜார்ஜ் குரியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் மும்பை பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மூணாறை சேர்ந்த டாக்சி கார் டிரைவர்களான லாக்காடு எஸ்டேட் பகுதியை சேர்ந்த 40 வயதாகும் விஜயகுமார் , மூணாறு தென்மலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த 44 வயதாகும் விநாயகன் (க்ஷ, மூணாறை சேர்ந்த 40 வயதாகும் அனீஷ்குமார் ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மூணாறில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications