ஏகே 47 தெரியும்.. அதென்ன AK-203? இந்தியாவில் ரெடியாகும் சூப்பர் துப்பாக்கிகள்! நிமிடத்திற்கு 700 தோட்டாக்கள் பாயுமாம்
டெல்லி: இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களில் பல புதுமைகள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், இந்திய ராணுவத்திலும் அதற்கேற்பப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அதிநவீன ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அமேதியில் தயாரிக்கப்படும் இந்த ரகத் துப்பாக்கிகளில் நிமிடத்திற்கு 700 குண்டுகளைச் சுட முடியும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்திய ராணுவத்திற்கு அதிநவீன ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் விரைவில் கிடைக்க உள்ளன. இந்தத் துப்பாக்கிகள், ரஷ்யாவின் புகழ்பெற்ற கலஷ்னிகோவ் துப்பாக்கி வரிசையில் நவீனப்படுத்தப்பட்ட மாடல் ஆகும். உலகப் புகழ்பெற்ற ஏகே 47 ரகத் துப்பாக்கிகள் இந்த கலஷ்னிகோவ் துப்பாக்கி மாடல்கள் தான். அதன் ஒரு மேம்பட்ட மாடலாகவே இந்த ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் இருக்கும்.

ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள்
இந்த ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 700 குண்டுகள் வரை சுடக்கூடிய திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும், இது 800 மீட்டர் தூரம் வரை துல்லியமாக இலக்கைத் தாக்கும். வழக்கமா நாம் இந்த வகைத் துப்பாக்கிகளை ராணுவம் உட்படப் பாதுகாப்புப் படைகளுக்குக் கொடுக்க இறக்குமதி தான் செய்வோம். ஆனால், இந்த முறை உள்ளூரிலேயே இந்த வகைத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்திய-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு முயற்சியில் இந்தத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 'ஷெர்' என்று அழைக்கப்படும் ஏ.கே.-203 துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா ராணுவம்
சுமார் ரூ.5,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், இந்த நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான துப்பாக்கிகளை வழங்கும். 2030 டிசம்பருக்குள் அனைத்துத் துப்பாக்கிகளையும் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளதாக இதன் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.கே.சர்மா தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 48,000 துப்பாக்கிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மேலும் 7,000 துப்பாக்கிகளும், இந்த ஆண்டு டிசம்பருக்குள் கூடுதலாக 15,000 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சூப்பர் துப்பாக்கிகள்
ஏ.கே.-203 'ஷெர்' துப்பாக்கிகள் ஏ.கே.-47 மற்றும் ஏ.கே.-56 துப்பாக்கிகளை விட நவீனமானது. மேலும், இது கலஷ்னிகோவ் துப்பாக்கி வரிசையில் மிகவும் ஆபத்தான துப்பாக்கியாகக் கருதப்படுகிறது. இந்தத் துப்பாக்கி இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள INSAS ரகத் துப்பாக்கிகளுக்கு மாற்றாக இருக்கும். ஏ.கே.-203 துப்பாக்கியில் 7.62x39 மிமீ சைஸில் இருக்கும் தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தற்போது INSAS துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 5.56x45 மிமீ தோட்டாக்களை விடப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு வழங்கப்படும்
ஏ.கே.-203 துப்பாக்கியின் எடை 3.8 கிலோ ஆகும். அதே சமயம் INSAS துப்பாக்கியின் எடை 4.15 கிலோவாகும். அதேபோல INSAS துப்பாக்கிகளின் நீளம் 960 மிமீ ஆக உள்ள நிலையில், புதிய ஏ.கே.-203 துப்பாக்கியின் நீளம் 705 மிமீ ஆகும். இந்திய ராணுவத்தின் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீனாவில் களமிறக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு தரத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications