புதையும் நகரம் ஜோஷிமத்! ஒட்டுமொத்த ஊரே புதைய என்ன காரணம்! நிலத்திற்கு அடியே நடக்கும் அசாதாரண மாற்றம்
டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள ஜோஷிமத் நகரம் இப்போது அப்படியே புதையத் தொடங்கியுள்ளது... இதற்கு என்ன காரணம் நிலத்திற்கு அடியே என்ன நடக்கிறது.. இதுபோல நடக்க என்ன காரணம் என்பதை வல்லுநர்கள் விளக்கியுள்ளனர்.
உத்தரகண்ட்டில் அமைந்துள்ள அழகிய நகரம் ஜோஷிமத். இமயமலையில் ஏற செல்பவர்களுக்கும்.. ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாக உள்ளது.
இப்படி பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நகரத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்த நகருக்கு அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ஊர் இப்போது வினோதமான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

ஜோஷிமத்
துமார் 1890 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள இந்த ஜோஷிமத் நகரத்தில் மொத்தம் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அண்டை ஊர்களில் இருந்தும் பிழைப்பிற்காக ஜோஷிமத் நகருக்குப் பலரும் குடிபெயர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த நகரமே கடந்த சில நாட்களாக மண்ணில் மூழ்கி வருகிறது. திட்டமிடப்படாத மற்றும் கண்மூடித்தனமான வளர்ச்சியே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அங்கிருந்த மக்களை வெளியேற்ற உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நிலைமையை ஆராய வல்லுநர் குழுவும் விரைந்துள்ளது.

சுற்றிலும் நதி
இதுபோன்ற சூழல் ஏற்பட என்ன காரணம் என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம் ஜோஷிமத் இமயமலை அருகே அமைந்துள்ள ஒரு நகரம்.. இது மட்டுமின்றி நகரின் மேற்கு மற்றும் கிழக்கில் கர்மனாசா மற்றும் தக்னாலா நீரோடைகளும்.. தெற்கு மற்றும் வடக்கில் தௌலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகளும் உள்ளன. இந்த நகரம் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. 1976ஆம் ஆண்டு மிஸ்ரா கமிஷன் அறிக்கையிலேயே நிலச்சரிவு ஆபத்து குறித்துத் தெளிவாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு
ஜோஷிமத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரிய பாறைகள், மற்றும் ஸ்கிஸ்டோஸ் பாறைகளின் துண்டுகளால் மூடப்பட்டுள்ளன. அங்கு வண்டல் மணலும் அதிகம். இதனால் அங்குள்ள மணல் ரொம்பவே பலவீனமாக இருப்பதால்.. அவை எளிதில் மூழ்கும் அபாயம் உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குநர் பியூஷ் ரவுடேலா தெரிவித்துள்ளார். எப்போதும் வற்றாத நீரோடைகள், கணிசமான பனிப்பொழிவு, எரிமலைப் பாறைகள் ஆகியவை நிலச்சரிவுகளை அதிகம் ஏற்படுத்துகிறது. ஜூன் 2013, பிப்ரவரி 2021இல் வெள்ளம் ஏற்பட்ட போதும், இந்த நிலச்சரிவு மண்டலத்தில் பாதிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது.

தொடர் மழை
கடந்த 2021 பிப்ரவரி 7ஆம் தேதி, ரிஷி கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள பனிப்பாறை வெடித்ததில், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதில் இருந்தே ரவிகிராமம் நாலா மற்றும் நவ் கங்கா நாலாவில் மண் அரிப்பு மற்றும் மண் சரிவு அதிகரித்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றனர். கடந்த 2021 அக். மாதம் ஒரே நாளில் 190 மிமி மழை பெய்தது. இதுவும் ஜோஷிமத் நகரின் நிலத்தைப் பலவீனப்படுத்தியது. இந்த மழையின் பாதிப்பை சாட்டிலைட் படங்களிலேயே பார்க்க முடிந்தது. அங்குள்ள நதிகளில் நீர் அதிகரித்து, அவை தங்கள் பாதைகளை கூட மாற்றிக் கொண்டன. இதுபோன்ற பல நிகழ்வுகள் சேர்ந்த ஜோஷிமத் ஸ்திரத்தன்மையை மோசமாகப் பாதித்தது.

டெக்டோனிக் ஃபால்ட் லைன்
இந்த மோசமான வானிலையுடன் இணைந்து சுற்றுச்சூழல்-டெக்டோனிக் மற்றும் புவிசார் காரணங்களும் ஜோஷிமத் மூழ்க காரணமாக மாறிவிட்டது. ஜோஷிமத் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள மண்டலம் 5இல் உள்ளது. இங்கு ரிக்டர் அளவுகோலில் 5க்கும் குறைவான பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஜோஷிமத் டெக்டோனிக் ஃபால்ட் லைன் வைகிரிதா தர்ஸ்ட் (VT) மீது அமைந்துள்ளது. இதன் அருகிலேயே மேலும் இரு டெக்டோனிக் ஃபால்ட் லைன் அமைந்துள்ளது. இதனால் நிலத்திற்கு அடியே ஏற்படும் மாற்றங்களும் ஜோஷிமத் நகருக்கு ஆபத்தை தருகிறது.

சாலை பணிகள்
மேலும், அப்பகுதியில் உள்ள ஹெலாங்கில் இப்போது புறவழிச்சாலை போடப்பட்டு வருகிறது. கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு வரும் இந்த புறவழிச் சாலை பத்ரிநாத் ஆன்மீக பயணத்திற்கான தூரத்தை சுமார் 30 கிமீ வரை குறைக்கிறது. இதுவும் கூட அதிக நிலச்சரிவுக்குக் காரணமாக அமைந்துவிடும். 1976ஆம் ஆண்டு மிஸ்ரா கமிஷன் அறிக்கை ஜோஷிமத்தை சுற்றியுள்ள பகுதியில் கனரக கட்டுமானங்களைத் தடை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தது. இருப்பினும், அதையும் தாண்டி இங்குக் கனரக இயந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதுவும் மோசமான விளைவை ஏற்படுத்தியது.

தெரிந்தும் அனுமதி
சார் தாம் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினரான சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹேமந்த் தியானி இது குறித்துக் கூறுகையில், "இப்பகுதியின் புவியியல் பாதிப்பு பற்றி முழுமையாக அறிந்திருந்தாலும், ஜோஷிமத் மற்றும் தபோவனத்தைச் சுற்றி நீர்மின் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்படும் சுரங்கப்பாதை ஜோஷிமத்திற்கு கீழே உள்ள பலவீனமான பகுதி வழியாகச் செல்கிறது. சுரங்கப்பாதையைத் தோண்டுவதற்கு ஒரு சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் (TBM) பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கையைச் செய்யக் கூடாது என்ற வல்லுநர் குழுவின் தொடர் அறிவுறுத்தலை இவர்கள் புறக்கணித்துள்ளனர். இதுவே மோசமான பாதிப்பு ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது" என்றார்.

பலவீனம்
கடந்த பத்தாண்டுகளில் ஜோஷிமத் நகரிலும் அதைச் சுற்றிலும் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தின் தன்மையை அறியாமல் இப்படிக் கட்டப்பட்ட கட்டிடங்களும் நிலத்தைப் பலவீனப்படுத்திவிட்டது. அங்கு நடைபெற்று வரும் நீர் மின்சாரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளும் சுரங்கப்பாதைகளுமே மோசமான நிலைமைக்குக் காரணம் என்று உள்ளூர் வாசிகள் குற்றஞ்சாட்டினார். நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் கூட புதிய கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இது அழுத்தத்தை அதிகப்படுத்தியதாக டெஹ்ராடூனைச் சேர்ந்த புவியியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதையும் நகரம் ஜோஷிமத்
இதுபோல புதிது புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் இயற்கையான நீர் வடிகால் அமைப்புகளைத் தடுத்தன.. இதனால் மழைநீர் புதிய வழிகளில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி பல்வேறு காரணங்கள் இணைந்து ஜோஷிமத் நகரை மூழ்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த நகரில் வாழும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தங்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications