மூணாறு நிலச்சரிவு.. ராஜமலை எத்தகைய பகுதி?.. விபத்து எப்படி நடந்தது? விவரிக்கும் மூணாறுவாசி
மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் உள்ள ராஜமலை பகுதியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார் மூணாறை சேர்ந்த ஒருவர்.
Recommended Video
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று மூணாறு. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த நாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழர்கள்.
நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கொழுக்குமலை எஸ்டேட் என ஆங்காங்கே உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

தேயிலை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மூணாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் போக்குவரத்து ஆகியவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ மலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் கனமழை பெய்தது.

குடியிருப்புகள்
இதன் காரணமாக எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த 4 வரிசையில் உள்ள குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன. இதில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 80 பேர் வரை இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளன மேலும் தற்போது 14 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிகிறது.

மின்சாரம்
இது தொடர்பாக மூணாறுவாசி ஒருவர் நம்மிடையே தெரிவிக்கையில், இரவில் இருந்து இப்பகுதியில் கடுமையான மழை பெய்தது. இப்போது ராஜமௌலி அருகே பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. தொலைத்தொடர்பு, மின்சாரம், சாலை என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மூணாறில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு செல்ல பெரியவாரை பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

மீட்பு பணிகள்
அந்தப் பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால் மீட்பு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் மீட்புக் குழுவினர் சென்றுதான் மீட்புப் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது என்று உருக்கமாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான விபத்தும் கேரளாவை உருக்குலைத்துவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications