திடீரென பற்றி எரிந்த விமானம்.. 68 பேர் உடல் கருகி பலி! பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
காத்மாண்டு: நேபாளத்தில் சுமார் 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் விமானம் நடக்க சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்றால் அது விமான போக்குவரத்து தான். சாலை, ரயிலைக் காட்டிலும் விமான போக்குவரத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் ரொம்பவே அரிது.
இருப்பினும், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விமான விபத்துகள் ஏற்பட்டுவிடும். அதுபோல விமான விபத்துகள் ஏற்படும் போது, அதில் இருக்கும் பயணிகளுக்குத் தப்பிக்கும் வாய்ப்பே இருக்காது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்.

விமான விபத்து
நேபாளத்தில் இப்போது அதேபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. அங்கு 72 பேருடன் சென்ற ஏடிஆர்-72 என்ற பயணிகள் விமானம் நேபாளத்தின் பொகாராவில் இன்று விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் தீயை அணைத்து உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலங்களில் நடந்த மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது உள்ளது.

காட்டு பகுதியில் விழுந்து விபத்து
காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ஏடிஆர் விமானம், பழைய உள்நாட்டு விமான நிலையத்துக்கும் பொக்ரா சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே ஓடும் சேதி கந்தகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை 10:33 மணிக்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டது. நேபாளத்தின் மூன்றாவது ஏர்போர்ட்டான திரிபுவன் சர்வதேச விமான நிலையம் சீன உதவியுடன் கட்டப்பட்டு இந்தாண்டு ஜன.1ஆம் தேதிதான் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக் கோளாறு
விமானம் விழுந்து நொறுங்கும் முன்பு அது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து பறந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, தொழில்நுட்பக் கோளாறால் விமானம் விபத்திற்குள்ளானதாகத் தெரிகிறது. வானிலை தெளிவாகவே இருந்ததால் விபத்திற்கு மோசமான வானிலை காரணமாக இருந்திருக்காது என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் தரையிறங்கவும் ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் அனுமதி அளித்திருந்த நிலையில், அதற்குள் இந்த மோசமான விபத்து அரங்கேறியுள்ளது.

நடுவானில் நெருப்பு
விமானம் தரையிறங்கும் முன்னரே, விமானம் முழுக்க நெருப்பு பிடித்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இது தொடர்பாக உதவ இந்தியத் தூதரகம் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறது. காத்மாண்டு: ஸ்ரீ திவாகர் சர்மா:+977-9851107021.. போகாரா: லெப்டினன்ட் கர்னல் ஷஷாங்க் திரிபாதி: +977-9856037699 ஆகிய எண்களில் உதவிகளைப் பெறலாம்.

நடவடிக்கை
இந்த விபத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், மீட்பு நிலைமையைக் கண்காணிக்கவும் பிரதமர் கமல் தஹால் பிரசாந்தா மற்றும் உள்துறை அமைச்சர் ரபி லாமிச்சானே திரிபுவன் விமான நிலையத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகளைப் பார்வையிடப் பிரதமர் விரைவில் விபத்து நடந்த இடத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விபத்து காரணமாக நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.

என்ன காரணம்
இது குறித்து நேபாள அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது ATR 72 ரக விமானம். இதன் அதிகபட்ச வேகம் 500 கிமீ.. இவை குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்பட்ட விமானம் எட்டி என்ற விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது.. அவர்கள் பெரும்பாலும் பழைய விமானங்களையே பயன்படுத்துவார்கள்.. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இந்த விமானத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஐயர்லாந்தின் ஒருவர், 2 கொரியர்கள், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த தலா ஒருவர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள்
நேபாள ராணுவம், ஆயுதப்படை போலீசார், நேபாள போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை குறைந்தது 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியா சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
இந்த விபத்திற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற பல உயிர்களை நாம் இழந்திருப்பது வேதனை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில், எனது பிரார்த்தனைகள் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுடன் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications