போர் நிறுத்தம் அமல்.. ஜம்மு காஷ்மீரில்அமைதி திரும்பியது.. இன்று காலை நிலவரம் என்ன? இதோ வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த புதன்கிழமை முதல் நேற்று வரை கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. போராக வெடிக்கும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து நம் நாடு கொடுத்த பதிலடி தாக்குதலில் பயந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது. இதையடுத்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புதல் கொடுத்த நிலையில் நேற்று இரவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று காலையில் எல்லையில் அமைதி நிலவியது.

நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் கடந்த 4 நாட்களாக அதிகரித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை நள்ளிரவில் நம் நாடு பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன்களை ஏவியது. அந்த ஏவுகணை, ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன.

what-is-the-situation-in-morning-in-jammu-kashmir-after-ceasefire-between-india-and-pakistan-detai

இருநாடுகள் இடையே நேற்று போர் பதற்றம் உச்சமடைந்தது. இதையடுத்து நேற்று மாலையில் போர் நிறுத்தம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மாலை புரிந்துணர்வு ஏற்பட்டது. அதன்பிறகும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி நம் படையும் தக்க பதிலடி கொடுத்தது. அதன்பிறகு நள்ளிரவில் இருந்து தாக்குதல் எதுவும் இல்லை.

இதையடுத்து இன்று காலையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் அமைதி திரும்பியது. ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் ட்ரோன், ஷெல் தாக்குதல் இல்லை. பாகிஸ்தானின் ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டது. அதேபோல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்போது போர் நிறுத்தம் காரணமாக அங்கு இயல்பு நிலை என்பது திரும்பி உள்ளது. ட்ரோன், ஷெல் மற்றும் துப்பாக்கிச்சூடு என்பது இல்லை.

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் உள்ள சாலைகளில் வாகனங்கள் இயல்பாக பயணிக்க தொடங்கின. மேலும் ராஜோரி பகுதியிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. அங்கும் எந்த தாக்குதலும்நடைபெறவில்லை. அதனால் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னூர் மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது போர் நிறுத்தம் அமலானதால் இன்று காலையில் அங்கும் இயல்பு நிலை திரும்பியது. வாகனங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கியது. கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடைகளுக்கு இயல்பாக சென்று வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் இன்று காலை முதல் இயல்பு நிலை என்பது திரும்ப தொடங்கி உள்ளது.

அதேபோல் பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூரையும் பாகிஸ்தானின் ட்ரோன்கள் பறந்தன. அந்த ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் இயல்பு வாழ்க்கை என்பது திரும்பி உள்ளது. வாகனங்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு தங்களின் வழக்கமான பணிகளை மேற்கொள்ள வாகனங்களில் பயணித்து வருகின்றன. இதன்மூலம் போர் நிறுத்தம் வாயிலாக ஜம்மு காஷ்மீரை போல் பஞ்சாப்பிலும் அமைதி திரும்பி மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது திரும்பி உள்ளது.

இப்படியான இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் எல்லையோரத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் அமைதி என்பது திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+