கோவாவில் நைஜீரியர்கள் சர்ச்சை.. இனவெறியா? போதைப் பொருள் விவகாரமா?
பனாஜி: கோவாவில் நைஜீரியர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் உணர்வுகள் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் மீதான வெறுப்பா? அல்லது இனவெறியா என்ற சூடான விவாதம் சமூகவலைதளங்களில் ரெக்கை கட்டி பறக்கின்றன.
இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் நைஜீரியர்கள் வாழ்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும் ஆயிரக்கணக்கான நைஜீரிய நாட்டவர் வாழ்கின்றனர்.
இந்தியாவில் கைது செய்யபட்ட நைஜீரிய நாட்டவர்கள் பெரும்பாலும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். சுற்றுலா மாநிலமான கோவாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகம். அங்கும் நைஜீரியர்கள் நூற்றுக் கணக்கில் வாழ்கின்றனர்.
இந்நிலையில்தான் கோவாவில் நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நைஜீரிய நாட்டவர் வன்முறையில் இறங்கினர். இதனால் கோவா மாநில மக்கள் நைஜீரியர்களுக்கு எதிராக உள்ளனர்.
தற்போது நைஜீரியர்களை மிக மோசமாக விமர்சித்து அம்மாநில அமைச்சர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நைஜீரியர்கள் கோவாவை பிடித்த புற்றுநோய்...காட்டு விலங்குகள் என்றெல்லாம் கூட ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார்.
அதேபோல் நைஜீரியர்களுக்கு கோவாவில் எவரும் தங்க வீடு கொடுப்பதில்லை..ஹோட்டல்களிலும் இடம் கொடுப்பதில்லை என்று ஏகமனதாக முடிவெடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலோ நைஜீரியர்கள் மீதான தாக்குதலுக்கு நிறவெறியே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் இயக்கத்தின் தலைவரான கவிதா கிருஷ்ணன் தமது ட்விட்டர் பக்கத்தில், கோவாவில் ஒரு நைஜீரியர் கொலை, பஞ்சாபில் ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் தாக்கப்பட்டு கோமா நிலையில் இருக்கிறார்.. இந்தியாவின் இந்த இனவெறித் தனத்துக்கு வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோன்ற குரல்கள் ஏகத்துக்கும் எதிரொலிக்கின்றன.
நைஜீரியர்களோ, எங்கள் நாட்டில் நீங்கள் குடியேறி கோடீஸ்வரர்களாக வசிக்கின்றீர்களே..நாங்கள் படிக்கவும் வாழவும் இந்தியாவுக்கு வந்துள்ளமே என்று குமுறுகின்றனர். கோவாவில் மையம் கொண்டிருக்கும் இந்த சர்ச்சை நாடு முழுவதும் வெடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications