2014-ல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற பாடுபடுவேன்: நரேந்திர மோடி
டெல்லி: 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற பாடுபடுவேன் என்று குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி கூறியதாவது:
சாதாரண தொண்டனான எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் பல்வேறு நிலைகளில் சாதாரண ஊழியனாக பணியாற்றியுள்ளேன். கடவுள் எனக்கு மிகுந்த பலத்தை அளித்துள்ளார். அனைவரது எதிர்ப்பார்பையும் நிறைவேற்றுவேன். கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. சிக்கலான நிலையிலுள்ள நாடு பாஜகவிடம் தீர்வை எதிர்பார்க்கிறது.

எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வரும் 2014ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்களிடமும், தொண்டர்களிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடப்போகிறேன்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பிரசாரத்தை துவங்குவோம். ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். பா.ஜ.,வின் வெற்றிக்காக எந்த ஒரு முயற்சியையும் நான் கைவிடப்போவதில்லை என்றார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications