காதைப் பிடித்து திருகிய மோடி.. வெட்கத்தில் சிரித்தபடி நெளிந்த வீரச் சிறுமி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தையொட்டி வீர தீர செயலுக்கான விருது பெற்ற ஒரு சிறுமியின் காதைப் பிடித்து செல்லமாக திருகிய படம் இப்போது வைரலாக மாறியுள்ளது.
அந்த சிறுமியின் பெயர் ரிபா தாஸ். வயது 8. பிரதமர் மோடி இவரது காதைப் பிடித்து செல்லமாக திருகியபடி போஸ் கொடுத்த புகைப்படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் தனக்குப் பின்னால் நின்று கொண்டு தனது காதைப் பிடித்து செல்லமாக திருகியதைப் பார்த்து அந்த சிறுமி வாய் நிறைய சிரிப்புடன் வெட்கத்துடன் நெளிகிறார்.

திரிபுராவைச் சேர்ந்தவர் ரிபா தாஸ். தீவிபத்திலிருந்து தனது தம்பியின் உயிரைக் காத்து தீரமாக நடந்து கொண்டார். இதற்காகத்தான் அவருக்கு வீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவரது வீடு தீவிபத்தில் சிக்கியபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது குட்டித் தம்பியை பத்திரமாக மீட்டு வந்து அசத்தினார் ரிபா தாஸ்.
சம்பவம் நடந்தபோது ரிபா தாஸின் தாயார் ஒரு அறையில் தனது ஒன்றரை வயது மகனுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதைப் பார்த்து பயந்து போன தாயார் வெளியே ஓடி வந்து விட்டார். அறைக்குள் குழந்தை மட்டும் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அந்த அறைக்குள் பாய்ந்த ரிபா தாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது தம்பியை பத்திரமாக இறுக்கிப் பிடித்தபடி வீட்டை விட்டு ஓடி வந்தார்.
இதுகுறித்த படத்துடன் பிரதமர் வெளியிட்டு்ள்ள டிவிட் செய்தியில், ரிபா தாஸ் என்ற எனது இந்த இளம் தோழியின் செயலை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இவள் தனது தம்பியை மிகப் பெரிய தீவிபத்திலிருந்து துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளாள் என்று பாராட்டியுள்ளார்.
திருகுவது முதல் முறையல்ல...!

மோடி இப்படி காதைப் பிடித்து திருகுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அவர் ஜப்பான் போயிருந்தார். அப்போது க்யோட்டோ நகரில் உள்ள கின்காகு ஜி என்ற கோவிலுக்குப் போயிருந்தபோதும் ஒரு சிறுவனின் காதைப் பிடித்து திருகியவர்தான் மோடி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications