ஒரே பாலில்.. 5 சிக்ஸர்.. முதல்வரானதும் சந்திரபாபு நாயுடு போடப்போகும் கையெழுத்து என்ன தெரியுமா? வாவ்
அமராவதி: நான்காவது முறையாக நேற்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற என் சந்திரபாபு நாயுடு இன்று மாலை 4:41 மணிக்கு தனது அலுவலகத்தில் அலுவல் ரீதியாக பொறுப்பேற்கிறார். இன்று அவர் 5 முக்கியமான கையெழுத்துக்களை போட உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே தெலுங்கு தேசம் வெற்றிபெற்றுள்ளது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஜெகன் 175 இடங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கினார்.

சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் - பாஜக - பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்றது. காங்கிரஸ் தனியாக சிபிஐ - சிபிஎம் உடன் கூட்டணி வைத்துள்ளது. 144 இடங்களில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் 135 இடங்களில் வென்றுள்ளது. பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்ற நிலையில் அனைத்து இடங்களிலும் வென்றது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவி ஏற்றார். பவன் கல்யாண் துணை முதல்வர் மற்றும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு விழா: நான்காவது முறையாக நேற்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற என் சந்திரபாபு நாயுடு இன்று மாலை 4:41 மணிக்கு தனது அலுவலகத்தில் அலுவல் ரீதியாக பொறுப்பேற்கிறார். இன்று அவர் 5 முக்கியமான கையெழுத்துக்களை போட உள்ளார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு, நாயுடு இன்று மெகா மாவட்டத் தேர்வுக் குழு (டிஎஸ்சி) அறிவிப்பு தொடர்பாக கையெழுத்து போட உள்ளார். அதாவது ஆந்திர மாவட்டங்களை மாற்றுவது, புதிய மாவட்டங்களை உருவாக்குவது.
முந்தைய அரசு கொண்டு வந்த நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை உயர்த்துவது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அதிரடியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் திறன் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் இளைஞர்களின் படிப்பு வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் அண்ணா கேன்டீன்களை (மானிய விலையில் வழங்கப்படும் உணவு கேண்டீன்) மீண்டும் அமைப்பது தொடர்பாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) முதியவர்கள், விதவைகள் மற்றும் பிற பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை உயர்த்துவதாக உறுதியளித்தது. அதை இன்றே நிறைவேற்ற உள்ளனர்.
ஆலோசனை: முன்னதாக புதன்கிழமை, பதவியேற்பு விழா முடிந்ததும், நாயுடு தனது இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் 164 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மகத்தான வெற்றியைப் பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications