Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சப்போஸ், பவானிசிங் நியமனம் செல்லாதுன்னு உச்சநீதிமன்றம் சொன்னா, ஜெ. வழக்கு கதி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.கவின் அன்பழகன் தொடர்நத வழக்கில், ஒருவேளை திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..

சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும், கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நியமிக்காமலேயே ஆஜரான பவானி

நியமிக்காமலேயே ஆஜரான பவானி

இவ்வழக்கில், அரசு தரப்பு வக்கீலாக, பவானிசிங் ஆஜராகிறார். இவர் சிறப்பு நீதிமன்றத்திலும் அரசு வக்கீலாக ஆஜரானவராகும். ஆனால், ஹைகோர்ட்டில் பவானிசிங் உட்பட யாரையுமே இதுவரை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை.

உச்சநீதிமன்றம் விசாரணை

உச்சநீதிமன்றம் விசாரணை

எனவே, பவானிசிங் ஆஜரானது தவறு, அவரை அரசு வக்கீல் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவின் அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே ஹைகோர்ட்டில், அப்பீல் மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி குமாரசாமி.

ஹைகோர்ட் தீர்ப்பளிக்க தடை

ஹைகோர்ட் தீர்ப்பளிக்க தடை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு தேதியை குமாரசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அன்பழகன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச், தீர்ப்பை இம்மாதம் 15ம்தேதி அறிவிக்க உள்ளதாகவும், அதுவரையில், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான தீர்ப்பை ஹைகோர்ட் வெளியிட கூடாது என்றும் அறிவித்தது.

சரின்னா ஓகே, இல்லைன்னா?

சரின்னா ஓகே, இல்லைன்னா?

பவானிசிங் ஆஜரானது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறினால், அதன்பிறகு ஹைகோர்ட் தனது தீர்ப்பை வெளியிடுவதற்கு தடை இருக்காது. வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும். ஒருவேளை, பவானிசிங் ஆஜரானது தவறு என்று தீர்ப்பு வெளியானால், அப்போது என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..

புது வக்கீல் நியமனம்

புது வக்கீல் நியமனம்

ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங் நீக்கப்பட்டால், கர்நாடக அரசும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்ந்து ஒரு புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பார்கள். ஏப்ரல் 20ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால், மேற்கொண்டு இந்த வழக்கு நடைபெறாது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால், அவர் இந்த வழக்கு விவரங்களைப் படிப்பதற்கு எப்படியும் ஓரிரு மாதங்கள் வாய்தா கேட்பார். அதற்குள், ஆகஸ்ட் மாதம் வந்துவிடும்.

நீதிபதி ஓய்வு

நீதிபதி ஓய்வு

அதில் ஒரு சிக்கல் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குமாரசாமியும் ஓய்வு பெறுகிறார்கள். அதன்பிறகு, வேறு சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டிவரும். அதற்குள் வருடமும் முடிந்துவிடும்.

தேர்தல் முக்கியமாச்சே..

தேர்தல் முக்கியமாச்சே..

இந்த இழுபறி, அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் எப்படியும், வழக்கில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கும், அதிமுகவினருக்கு, காலம் வீணாவது பிடிக்கவில்லை. ஏனெனில் வழக்கில் இருந்து வெளிவந்தால்தான், அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க ஜெயலலிதா முழு வீச்சில் களமிறங்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+