ஹலோ.. வாட்ஸ்அப்ல இருந்து பேசுறேன்! இந்தியாவில் வாய்ஸ் கால் சேவையை தொடங்கியது வாட்ஸ்அப்
டெல்லி: 'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது.
அதிக கொள்ளளவு உள்ள படங்களையும், வீடியோக்களையும் உடனுக்குடன் மிக விரைவாக அனுப்ப, வாட்ஸ் அப் என்ற, செயலி உதவுகிறது. இத்துடன், பேசும் வசதியையும் இணைக்க, நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், குறிப்பிட்ட சிலரிடம், சோதனை அடிப்படையில், 'வாட்ஸ் அப்'பில் பேசும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. ஆயினும், பொதுவான பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.

இதுகுறித்து, 'வாட்ஸ் அப்' நிறுவனம் சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், நேற்று முதல் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் 'வாட்ஸ் அப்'பில் பேசிக் கொள்ள வசதி கிடைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தில் (ஆணை தொகுப்பில்) இயங்கும், 'வாட்ஸ் அப்' செயலி வைத்துள்ள அனைவரும், அதன் மூலம் நண்பர்களிடம் பேச முடியாது. இதற்காக, 'வாட்ஸ் அப்' வலைதளத்தில் நுழைந்து, மேம்படுத்தப்பட்ட, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அப்படியே அதை பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேசுவதற்காக இணைய முடியாது. எதிர் தரப்பில் பேசுபவரிடமும், அந்த பைல் இருந்தால் மட்டுமே பேசலாம். அவ்வாறின்றி, நண்பருக்கு அந்த பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேசலாம்.
உள் அழைப்பு, வெளி அழைப்பு எண்களும் ஸ்மார்ட் போனைப்போலவே இதிலும் சேமிக்கப்படும்.
கம்ப்யூட்டரிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் வாட்ஸ்அப்-வெப் சேவையை சில வாரங்கள் முன்பு வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருந்தது. வாட்ஸ்அப்பை, பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது முதல் இதுபோன்ற அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications