"எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" ஆவேசம் அடைந்த கமல்நாத்! ஒரு சீட்டையும் தூக்க பாஜக பிளானாம்!
போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பாஜகவில் இணைய உள்ளதாக அண்மையில் தகவல் பரவிய நிலையில், இன்று ஆவேசமாக பேசியுள்ளார் கமல்நாத். "எனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? நான் ஏன் பாஜகவில் சேரப்போகிறேன்" என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார் கமல்நாத்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், சிந்த்வாரா மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான ஹராரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

எனக்கென்ன பைத்தியமா?: அப்போது ஆக்ரோஷமாக பேசிய கமல்நாத், "நீங்கள் கமல்நாத்திடம் இருந்து விடைபெற விரும்பினால், அது உங்கள் விருப்பம். இன்றைக்கு பாஜக மிகவும் வலுவாகவும் ஆக்ரோஷமாகவும் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். இது எல்லாம் அவர்களின் அஜெண்டா. உங்களைத் தூண்டிவிட பாஜக ஆட்கள் வருவார்கள்.
கமல்நாத் பாஜகவில் சேரப்போவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படும். பாஜகவில் இணைவதாக நான் எப்போதாவது எங்காவது கூறினேனா? எனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இதுபோன்று பரப்பப்படும் எல்லா விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எனது கடைசி மூச்சு வரை சிந்த்வாராவுக்காகவே அர்ப்பணித்துள்ளேன்.
ராமர் அரசியல்: ராமர் கோவில் குத்தகை பாஜவுக்கு சொந்தமானதா? அது என்னுடையது, உங்களையுடையது. உங்கள் பணத்தில் உருவாக்கப்பட்டது. ராமரை அரசியல் மேடைக்கு கொண்டு வர வேண்டுமா? நாம் அனைவரும் ராமரை வணங்குகிறோம். 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் மிகப்பெரிய அனுமன் கோவிலை கட்டினேன். எந்த அரசு நிலத்திலும் இல்லை, என் இடத்தில் கட்டினேன். இவர்கள் நமக்கு பாடம் புகட்டுவார்களாம்? நமது கலாச்சாரம் சகோதரத்துவம் கொண்டது. அதைக் கட்டிக் காக்க வேண்டும்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கமல்நாத், பாஜகவில் சேரப்போவதாக சமீபகாலமாக பல ஊகங்கள் எழுந்தன. இதுபற்றி ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், கமல்நாத் பாஜகவில் சேரும் திட்டம் இல்லை என்று உறுதியாக மறுத்துள்ளார். சிந்த்வாரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேகொண்டுள்ள கமல்நாத், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது பாஜகவில் சேருவது குறித்த ஊகங்கள் ஊடகங்களின் தயாரிப்பு என்றும், தான் ஒருபோதும் அத்தகைய எண்ணத்தில் இல்லை என்றும் கூறினார்.
நானா சொன்னேன்?: நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத்திடம் பாஜகவில் இணைவதாக பரவிய தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்நாத், "நீங்கள் தான் அப்படிச் சொல்கிறீர்கள். வேறு யாரும் அப்படிச் சொல்லவில்லை. நான் அப்படிச் சொல்லி நீங்கள் ஏதாவது கேட்டீர்களா? அதற்கான அறிகுறி ஏதாவது இருக்கிறதா? ஒன்றுமே இல்லை. நீங்கள் தான் அந்தச் செய்தியை உருவாக்கி உலவ விட்டீர்கள். பின்னர் என்னிடம் அதுபற்றிக் கேட்கிறீர்கள். முதலில் நீங்கள் அதை மறுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
சிந்த்வாரா டார்கெட்: சிந்த்வாரா தொகுதியில் 9 முறை எம்.பி.யாக இருந்த கமல்நாத் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். கமல்நாத்தின் மகன் நகுல்நாத் இப்போது சிந்த்வாரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்பியாக உள்ளார். இந்த முறையும் சிந்த்வாராவில் இருந்து நகுல் நாத், காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சிந்த்வாரா நாடாளுமன்றத் தொகுதியில் கமல்நாத் தனது சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
ம.பியில் காங்கிரஸ் வென்ற ஒரே தொகுதி: அதேசமயம், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ம.பி மாநிலத்தில் உள்ள 29 லோக்சபா தொகுதிகளில், பாஜக 28 இடங்களை கையில் வைத்துள்ளது. சிந்த்வாரா தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்றது. இப்போது பாஜக எந்த விலை கொடுத்தும் சிந்த்வாரா தொகுதியைக் கைப்பற்ற விரும்புகிறது. மத்திய பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் மோகன் யாதவ் மற்றும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் தொடர்ந்து சிந்த்வாராவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications