அதோ வானிலே.. பறந்து கொண்டே பட்டையைக் கிளப்பும் ட்யூன் போட்ட ஆர்.டி. பர்மன்
டெல்லி: ஞானிகளுக்கு எந்த இடமாக இருந்தாலும் கவலை இல்லை.. அவர்களது ஞானம் நூபர கங்கை போல பொங்கிப் பெருக்கெடுக்கும். ஆர்.டி. பர்மன் போன்ற இசை மேதைகளுக்கும் அப்படித்தான். இடம் குறித்துக் கவலை இல்லாமல் இசை மழை பொழிந்தபடி இருக்கும்.
ஆர்.டி.பர்மனின் இசை மழையில் நனையாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இசை மேதையின் இசை மூளையிலிருந்து கொப்பளித்துக் கொட்டிய இசை முத்துக்கள் ஏராளம் ஏராளம்.
அதிலும் தரையை விட வானில் பறந்தபடி அவர் போட்டு அட்டகாசமான மெட்டுக்களைப் பெரிய பட்டியலே போடலாம்.

பாம்பே டூ டெல்லி
ஒருமுறை பாம்பே டூ டெல்லி இடையே விமானத்தில் பறந்தபோதுதான் 1971ம் ஆண்டு வெளியான கத்தி பதங்க படத்திற்காக அவர் யே ஜோ மொஹபத் ஹை என்ற சூப்பர்ஹிட் பாடலுக்கான மெட்டைப் போட்டார். ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான ஹிட் படம் அது.

டென்ஷனைக் குறைக்க போட்ட மெட்டு
அந்த விமானத்தில் பர்மனுடன், ராஜேஷும் பயணித்தார். அப்போது தான் டென்ஷனாக இருப்பதாகவும், ஏதாவது ட்யூனை ஹம் செய்யுமாறும் அவர் பர்மனிடம் கேட்க அவர் ஹம் செய்த ட்யூன்தான் இது. இது பின்னர் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

சொக்கிப் போன பயணிகள்
பாடல் கேட்டது என்னவோ கன்னாதான். ஆனால் பாடலைக் கேட்டு சுற்றியி்ருந்த பயணிகள் எல்லாரும் சொக்கிப் போய் விட்டார்களாம். அப்போதே தெரிந்து விட்டது இந்த மெட்டு செம ஹிட்டாகும் என்று.

பாட்டை சேருங்க
விமான பயணம் முடிந்துதம் தரையிறங்கிய பின்னர் தயாரிப்பாளர்- இயக்குநர் சக்தி சமந்தாவை அழைத்து கத்தி பதங் படத்தில் இந்தப் பாட்டை சேர்க்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டாராம் கன்னா.
கிஷோர் குமார் குரலில்
இந்தப் பாடலை கிஷோர் குமார் பாடி பெரும் புகழ் பெற்றது. இதற்காக பிலிம்பேர் சிறந்த பாடகருக்கான விருதுக்கும் கிஷோர் பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும் மன்னா டே தனது ஏ பாய் ஸாரா தேக் கே சல் என்ற பாடலுக்காக விருதைத் தட்டிச் சென்று விட்டார். அது ராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கரில் இடம் பெற்ற பாடலாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications