For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதெப்படி "எங்க புலி"யை நீங்க மிஸ் பண்ணலாம்.. பொங்குகிறார் மமதா

புதிய 2000 ரூபாய் நோட்டில் வங்கப் புலியின் படம் இடம் பெறாதது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: புதிய 2000 ரூபாய் நோட்டில் வங்கப் புலியின் படம் இடம் பெறாமல் போனது ஏன் என்று கேட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

இது தற்செயலாக விடுபட்டதா அல்லது வேண்டும் என்றே விட்டு விட்டு டிசைன் செய்தார்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.

Where is Royal Bengal Tiger in Rs 2000 note? asks Mamata

இதுகுறித்து மமதா பானர்ஜி கூறுகையில், சுந்தரவனக் காடுகள் குறித்தும், ராயல் பெங்கால் டைகர் குறித்தும் உலகத்துக்கே தெரியும். புதிய 2000 ரூபாய் நோட்டில், இதை எப்படி விட்டார்கள் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். யானை இருக்கிறது. ஆனால் புலி இல்லை.

யானையை தேசிய பாரம்பரியம் என்று சொல்வார்கள். ஆனால் தேசிய விலங்கு குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்றார் மமதா.

மமதா கூறுவது புதிய 2000 ரூபாய் நோட்டில் யானை இருக்கிறது. மயில் இருக்கிறது. ஏன் தாமரை கூட இருக்கிறது. ஆனால் புலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal chief minister Mamata Banerjee has questioned the centre that why it missed the Royal Bengal Tiger in Rs 2000 note?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X