அப்படியே பலிச்சிட்டே.. காஷ்மீர் தேர்தல் முடிவை சரியாக கணித்த இந்தியா டுடே - சி வோட்டர்! இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இன்று ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே இந்தியா டுடே - சி வோட்டர் கணித்த எக்ஸிட் போல் அப்படியே பலித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

jammu kashmir assembly election results 2024 jammu kashmir election exit polls exit polls 2024 2024

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. பாஜகவும் அதேபோல் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கின.

கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் முடிவில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி உள்பட 4 கட்சிகள் அங்கம் வகிக்கும் ‛இந்தியா' கூட்டணி 51 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் 8 இடங்களிலும், ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

தனித்து போட்டியிட்ட பாஜக 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் ஓட்டு சதவீதம் என்பது 26.36 சதவீதமாக உள்ளது. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 7 தொகுதிகளில் சுயேச்சைகள் லீடிங்கில் உள்ளனர். இந்நிலையில் தான் தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா டூடே - சி வோட்டர் நடத்தி வெளியிட்ட எக்ஸிட் போல் கருத்து கணிப்பு சரியாக பலித்துள்ளது.

அதாவது இந்தியா டுடே - சி வோட்டர் எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் தேசிய மாநாட்டு கட்சி + காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 தொகுதிகளில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது. தற்போது ‛இந்தியா' கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.‛இந்தியா' கூட்டணியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.

மாறாக பாஜக 27 முதல் 32 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம்ஆத்மி, ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வென்றுள்ளனர். இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும். இதன்மூலம் இந்தியா டுடே - சி வோட்டர் கருத்து கணிப்பு ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவை முன்கூட்டியே சரியாக கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+