அடியோடு மாறுது ஆட்சி.. கையில் ஏகப்பட்ட எம்எல்ஏக்கள்.. ம.பி, ராஜஸ்தானின் முதல்வர்கள் இவரா? பரபர பாஜக
ஜெய்ப்பூர்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், நவம்பர் 25-ந் தேதி 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.. இதில், பாஜக மொத்தம் 115 இடங்களை கைப்பற்றியது...

ஆனால் காங்கிரஸ் வெறும் 69 இடங்களை மட்டுமே பிடித்தது.. இதனால், பாஜக ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கிறது. ஆனால், ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
ஏற்கனவே 2 முறை வசுந்தரா முதல்வராக இருந்த இலையில் 3வது முறையும் முதல்வர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். எனவே, முதல்வர் யார் என்பதில், முதல் பெயராக, முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவின் பலமாக அடிபடுகிறது.. காரணம், 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு உள்ளதால், தன்னையே முதல்வராக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.
ஆனால், இவர் சில எம்எல்ஏக்களை, கெஸ்ட் அவுஸ்களில் சிறைவைத்திருப்பதாகவும், கூறப்படுகிறது. இதனால், வசுந்தர இவரை முதல்வராக அறிவிப்பதில் குழப்பம் நிலவுகிறது.. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் பேசியிருந்தபோதும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நேற்றுகூட அவரை 10-க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் சந்திக்க திரண்டதாக சொன்னார்கள்.. காரணம், எவ்வளவு பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்பதை தலைமைக்கு காட்டும் வகையிலேயே எம்எல்ஏக்களை வசுந்தரா சந்தித்தாகவும்கூறப்பட்டது
மற்றொருபுறம், ராஜஸ்தானின் புதிய முதல்வராக பாபா பாலக்நாத் பெயரும் அடிபட்டு வருவதால், இவரது பெயரை அறிவிக்கலாம் என்கிறார்கள்.
முதல்வரை தேர்வு செய்வதற்காகவே, பாஜக தலைமையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இன்று ஜெய்ப்பூரில் பாஜக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் யார் என்பதை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை, பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரசுக்கு 66 இடங்களே கிடைத்தன. அந்தவகையில், மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டி பாஜகவுக்கு உள்ளது.. இப்போது, சிவராஜ் சிங் சௌஹான் முதல்வராக அங்கு நீடிப்பாரா? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் படேல், நரேந்திர சிங் தோமர், மூத்த தலைவர் கைலாஜ் விஜய்வர்கியா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போன்றோரின் பெயர்படும் அடிபடுகின்றன.
எனவே, இன்றைய தினம் பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுவதால், இதல் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் லஷ்மன் , செயலர் ஆஷா லக்ரா போன்றோர் இன்றைய கூட்டத்தில் பங்கெடுக்க உள்ளனர் ஆக, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை ஆளப்போவது யார் என்பது, இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்பதால் பாஜகவுக்குள் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications