தமிழக தம்பதிக்கு கவுரவம்..மோடியுடன் சேர்ந்து ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்த ஆடலரசன்..யார் இவர்?
அயோத்தி: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் என்பவர் தனது மனைவியுடன் பிரதிஷ்டை சடங்கு செய்தனர். அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய பால பருவ ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்பது இன்று மதியம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விழாவுக்காக பிரதமர் மோடி 10.25 மணிக்கு அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தார். மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரதமர் மோடி கோவில் கருவறையில் ராமர் சிலைக்கு முன்பு அமர்ந்து பிரான் பிரதிஷ்டைக்கான சடங்குகளை செய்தார். அதன்பிறகு பால ராமரின் கண்கள் திறக்கப்பட்டது. சிரித்த முகத்துடன் பால ராமர் அருள்பாலித்தார். பிரதமர் மோடி தீபாராதனை செய்து வழிபட்டார். மொத்தம் 40 நிமிடம் பிரதமர் மோடி ராமர் கோவிலில் இருந்தார்.
பிரதமர் மோடியுடன் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவுக்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் பிரதிஷ்டை சடங்குகளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த 14 தம்பதிகள் மேற்கொண்டனர். தலித் முதல் பழங்குடியினர், ஓபிசி பிரிவுகளை சேர்ந்த தம்பதிகளும் இதில் அடங்குவர். இந்த தம்பதிகள் கோவிலில் பிரதிஷ்டை தின யாகம் செய்தனர். முன்னதாக இவர்களின் பட்டியலை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை வெளியிட்டு இருந்தது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் என்பவரின் பெயர் இடம் பெற்று இருந்தது. இவர் தனது மனைவியுடன் பிரதிஷ்டை சடங்கை செய்தார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இவர் தென் தமிழக ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications