For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவின் தலித் பிரிவு தலைவர், வழக்கறிஞர்.. யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயரை அறிவித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.

பாஜக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என தீவிர விவாதங்கள் நடந்து வந்தன. பாஜக கட்சியை சேர்ந்த, நாட்டு மக்களிடையே பிரபலமாக உள்ள பல்வேறு பெயர்கள் விவாதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 71 வயதாகும், ராம்நாத் கோவிந்த் அக்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரை பூர்வீகமாக கொண்டவர் இவர்.

Who is Ram Nath Kovind, the next President of India

1945ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி பிறநத் இவர், தற்போது பீகார் மாநில ஆளுநராக உள்ளார். உத்தரபிரதேசத்தில் இருந்து 1994-2000 மற்றும், 2000-2006 வருடங்களில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தவர் ராம் நாத் கோவிந்த்.

இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்று, டெல்லியில் பயிற்சி எடுத்தவர். பாஜக தலித் பிரிவின் முன்னாள் தலைவராகும் இவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பின்புலமாக கொண்டவர். 1998-2002க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இப்பதவியில் இருந்தார். அனைத்திந்திய கோலி சமாஜ் தலைவராகவும் பதவி வகித்தவர்.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த இவர், 2015 அக்டோபர் 8ம் தேதி முதல், பீகார் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெறும் பீகாரின் ஆளுநராக இவரை நியமித்ததில் இருந்தே, அவரின் கட்சி விசுவாசம், கட்சி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை தெரியவரும்.

ராம்நாத்கோவிந்த், 23ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

English summary
The BJP today announced that Ram Nath Kovind will be their candidate for the next President of India. Kovind is currently the Governor of Bihar.Ram Nath Kovind was born on 1 October 1945 at Derapur district.He was elected to Rajya Sabha from state of Uttar Pradesh during the two terms of 1994-2000 and 2000-2006. He is an advocate by profession and practised at Delhi.He is a former President of the BJP Dalit Morcha (1998-2002) and President of the All-India Koli Samaj. He also served as national spokesperson of the party. On 8 August 2015 the President of India appointed him the Governor of Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X