இந்து மதத்தை சேர்ந்தவர்.. காஷ்மீர் துணை முதல்வரான சுரிந்தர் சவுத்ரி! யார் இவர்? பாஜக புதுசிக்கல்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை முதல்வராக இந்து மதத்தை சேர்ந்த சுரிந்தர் சவுத்ரி இன்று பொறுப்பேற்றார். ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் பதவி ஏன் இந்துவான சுரிந்தர் சவுத்ரிக்கு வழங்கப்பட்டது? இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா பாஜகவுக்கு எப்படி செக் வைக்கிறார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு முதல் முதலாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 சட்டசபை தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 42 இடங்களில் வெல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்தது. காங்கிரஸ் - ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து களமிறங்கியது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி மற்றும் ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிட்டன. மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.
கடந்த 8 ம்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன
ஆட்சியை பிடிக்க 46 எம்எல்ஏக்கள் வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் சப்போர்ட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் 4 சுயேச்சைகள் மற்றும் வென்ற ஒரு ஆம்ஆத்மி எம்எல்ஏ என மொத்தம் 5 பேர் தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரஸை சேர்க்காமல் எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது 47 ஆக அதிகரித்தது.
இதையடுத்து தான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரான ஓமர் அப்துல்லா இன்று பதவியேற்றார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் துணை முதல்வராக இந்து மதத்தை சேர்ந்த சுரிந்தர் சவுத்ரி பொறுப்பேற்றார். இவர் தான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான பிறகு முதல் இந்து மத துணை முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் பெற்றது. தேசிய மாநாட்டு கட்சி இஸ்லாமியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களாக இருக்கும் நிலையில் ஓமர் அப்துல்லாவின் இந்த முடிவு என்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்துள்ளது.
இந்நிலையில் தான் சுரிந்தர் சவுத்ரி யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தன் பின்னணி பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுரிந்தர் சவுத்ரி ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். இவர் 1987 ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 12ம் வகுப்பை படித்து முடித்தார். ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இவர் இந்து மதத்தில் பிறந்தவர். ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கியமான இந்து மதத்தை சேர்ந்த அரசியல்வாதிகளில் இவர் மிகவும் முக்கியமானவர்.
இவர் தொடக்கத்தில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2014 சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது பாஜகவும் -பிடிபி கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இந்த கூட்டணி அமைய முக்கியமாக இருந்தவர் சுரிந்தர் சவுத்ரி தான். இதனால் மெகபூபா முப்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராக உயர்ந்தார். அதன்பிறகு இந்த கூட்டணி ஆட்சி கலைந்த பிறகு சுரிந்தர் சவுத்ரி மெகபூபாவின் பிடிபி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பாஜகவில் இருந்து விலகி ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியில் சேர்ந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவராக இருக்கும் ரவீந்தர் ரெய்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பாஜகவில் இருந்து வெளியேறினார். அந்த சமயத்தில் சுரிந்தர் சவுத்ரி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛குட் பை பாஜக.. ரவீந்தர் ரெய்னாவே உங்களின் வாரிசு மற்றும் ஊழல்கள் மூலம் மகிழ்ச்சியாக இருங்கள்'' என பதிவிட்டு இருந்தது பேசும்பொருளானது. இதன்மூலம் ரவீந்தர் ரெய்னாவுடனான கருத்து வேறுபாட்டால் தான் சுரிந்தர் சவுத்ரி பாஜகவை விட்டு விலகியது உறுதியானது.
அதன்பிறகு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் அதன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷாரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இங்கு வெற்றியை நிர்ணயம் செய்வது இந்து மக்களின் ஓட்டுகள் தான். இதையடுத்து ரவீந்தர் ரெய்னாவை எதிர்த்து சுரிந்தர் சவுத்ரி களமிறக்கப்பட்டார். சுரிந்தர் சவுத்ரி தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த 2014 தேர்தலில் இநு்த தொகுதியில் ரவீந்தர் ரெய்னா பாஜக எம்எல்ஏவாக இருந்தார். இதனால் மீண்டும் அவர் வெற்றி பெறுவார் என்று பாஜக நம்பிக்கை வைத்தது.
ஆனால் தேர்தல் முடிவு என்பது முற்றிலும் மாறுபட்டது. இந்த தேர்தலில் சுரிந்தர் சவுத்ரி மொத்தம 35,069 ஓட்டுகள் பெற்றார். பாஜக வேட்பாளரான ரவீந்தர் ரெய்னா 27,250 ஓட்டுகள் மட்டமே பெற்றார். இதனால் ரவீந்தர் ரெய்னாவை 7,819 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுரிந்தர் சவுத்ரி வீழ்த்தி வெற்றி பெற்றார். ஜம்மு காஷ்மீரில் பாஜக 29 தொகுதிகளில் வென்றாலும் கூட அதன் தலைவர் ரவீந்தர் ரெய்னாவை வீழ்த்தி இருப்பது காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் சுரிந்தர் சவுத்ரி தான்.
இதுதான் சுரிந்தர் சவுத்ரிக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க முதற் காரணமாகும். அதேபோல் 2வதும் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் ஜம்மு காஷ்மீரில் பாஜக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த 2014ல் 25 தொகுதிகளில் வென்ற பாஜக தற்போது 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் ஜம்மு காஷ்மீரில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களில் 28 பேர் இந்துக்கள், ஒருவர் சீக்கியர் ஆவார்.
மறுபுறம் பார்த்தால் தேசிய மாநாட்டு கட்சி இந்த தேர்தலில் ஒரு பெண் உள்பட மொத்தம் 9 இந்து வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் 19 இந்து வேட்பாளர்கள், 2 சீக்கியர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தார்.
இப்படியான சூழலில் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்றால் இந்து மதத்தை சேர்ந்த ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்பதை உணர்ந்து தான் ஓமர் அப்துல்லா தனது கட்சி சார்பில் வெற்றி பெற்ற 2 இந்து வேட்பாளர்களில் ஒருவரான சுரிந்தர் சவுத்ரிக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்துள்ளார். இவரை வைத்து இந்துக்களின் ஓட்டுகளை வசப்படுத்த முடியும் என்பதோடு, பாஜகவின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று ஓமர் அப்துல்லா நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications