மனைவியின் அந்த வீடியோவை பார்த்ததுமே கொந்தளித்த கொத்தனார்.. தலைக்கு ஏறிய காமம்..சொல்ல சொல்ல கேட்கலியே
கொல்கத்தா: நிறைய ஆண் நண்பர்களுடன் வரம்பு மீறி பழகிய பெண், படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்கத்தாவில் ஹரிநாராயண்பூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரிமாள் பைத்யா.. இவருக்கு 38 வயதாகிறது.. கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் அபர்ணா.. 35 வயதாகிறது. இவர்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகிறது.. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மகள் நர்சரி கிளாசும், மகன் 7வது வகுப்பும் படித்து வருகிறார்கள்.

வீடியோக்கள்: சோஷியல் மீடியாவில் அபர்ணா ஆர்வமாக இருந்துள்ளார்.. இதனால், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் வந்துள்ளார்.. இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ்களும் கிடைத்துள்ளனர்.. ஓரளவு பிரபலமாகிவிட்டதால், ரீல்ஸ் பதிவிடாமல் அபர்ணாவால் இருக்க முடியவில்லை.
ஒருகட்டத்தில், இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்கள் அதிகமானார்கள்.. அவர்களிடம் நெருக்கம் அதிகமாகிவிட்டது.. இதில், சில ஆண்களுடன், எல்லைமீறி பழகியதாகவும் தெரிகிறது.
அபர்ணாவின் நடவடிக்கையில் நாளுக்கு நாள் மாற்றம் இருந்ததை அறிந்த கணவர், இனிமேல் ரீல்ஸ் வீடியோ வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், அபர்ணா அவரது பேச்சை காதில் வாங்கவில்லை.. பிறகு ஆண் நண்பர்களுடன் பழகக்கூடாது என்று சத்தம் போட்டுள்ளார்.. இந்த பேச்சையும் அபர்ணா கேட்கவில்லை..
தம்பதி மோதல்: தொடர்ந்து ரீல்ஸ் தயாரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்திருக்கிறார்.. இதுவே, தம்பதிக்குள் மோதல் அதிகமாக காரணமாகிவிட்டது. தகராறு அதிகமாகிவிட்டால், சண்டை போட்டுக் கொண்டு, அடிக்கடி தன்னுடைய அம்மா வீட்டுக்கு போய்விடுவாராம் அபர்ணா..
இந்த நிலையில், நேற்று மாலை, டியூஷனுக்கு சென்றுவிட்டு, அபர்ணா மகன் வீட்டுக்குள் நுழைந்த போது, அபர்ணா கழுத்து அறுபட்டு பிணமாக கிடந்ததை கண்டு அலறியுள்ளான்..
பிறகு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, ஜோயாநகர் போலீசில் இதுகுறித்து புகார் தந்தார்கள்.. போலீசாரும் அபர்ணாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது. அபர்ணாவின் மகனிடம் போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.
கொலை: "அப்பா, அம்மாவுக்கு அடிக்கடி தகராறு வரும், எல்லாத்துக்கு காரணம் ரீல்ஸ் வீடியோதான்" என்றும் மகன் வாக்குமூலத்தில் சொன்னார். இதற்கு பிறகு, அபர்ணாவை கொலை செய்ய பயன்படுத்திய, கத்தியை வீட்டில் இருந்து பறிமுதல் செய்தனர். ஆனால், அதற்குள் அபர்ணாவை கொன்ற கணவர் தலைமறைவாகிவிட்டார். அவரைதான் போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications