முரட்டுத்தனமான உறவு.. காதலிக்கு திடீர் ரத்தப்போக்கு.. கூகுளில் சிகிச்சை பற்றி சர்ச் செய்த நபர்.. ஐயோ
காந்திநகர்: இளம்ஜோடி ஒன்று ஓட்டலில் ரூம் போட்டு, ஜாலியாக இருந்துள்ளது.. அப்போதுதான் இப்படியொரு விபரீதம் நடந்துள்ளது.. யாருக்குமே இந்த விஷயம் தெரியக்கூடாது என்று இளைஞர் எடுத்த ஒவ்வொரு முயற்சியும், இன்று அவருக்கே எதிராக திரும்பி விட்டது.. என்ன நடந்தது குஜராத்தில்?
குஜராத் மாநிலம் சிக்லி தாலுகாவை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறார்.. சோஷியல் மீடியாவில் இளைஞர் ஒருவர், இந்த பெண்ணுக்கு 3 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார்..

சோஷியல் மீடியா: நாளுக்கு நாள் இவர்களது நட்பு, நெருக்கமானது.. இருவருமே நெருங்கி பழகினார்கள்.. ஆனால், ஒரு வருடத்துக்கு பிறகு இருவருமே, தொடர்பில் இல்லாமல் இருந்தனர்.. பிறகு மறுபடியும், 7 மாதங்களுக்கு முன்புதான், சோஷியல் மீடியா மூலம் மீண்டும் இணைந்தனர்.. தங்களது டேட்டிங்கையும் தொடர்ந்தனர்.
சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.. இதற்காக நவ்சாரியில் உள்ள ஒரு ஹோட்டலை புக் செய்திருந்தார் அந்த இளைஞர்.. இளம்பெண்ணும், அன்றைய தினம் காலேஜூக்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, காதலனை சந்திக்க ஓட்டல் ரூமுக்கு சென்றுள்ளார்.. அப்போது இருவருமே உடலுறவு கொண்டுள்ளனர்..
ரத்தப்போக்கு: அப்போது, பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.. இதைப்பார்த்து பயந்துபோன இளைஞர், ரத்தத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் விழித்துள்ளார்.. மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும் பிரச்சனையாகிவிடுமே என்று நினைத்து, "உடலுறவின் போது ரத்தப்போக்கு நிறுத்த என்ன செய்ய வேண்டும்" என்று ஆன்லைனில் சிகிச்சையை தேட ஆரம்பித்தார்.. ஆனால், அதில் எந்த முறையான விடையும் கிடைக்கவில்லை..
எனவே, தன்னுடைய நண்பர்களுக்கு போனை போட்டு உதவிக்கு அழைத்தார். ஆனால், இவ்வளவும் செய்வதற்குள் பெண்ணுக்கு ரத்தப்போக்கு மேலும் அதிகமாகிவிட்டது. இதனால், வேறு வழியின்றி, தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு, பெண்ணை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்..
பலத்த காயம்: இளம்பெண் இறந்த விஷயம், அவரது வீட்டுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்கள்.. தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு மருத்துவமனையில் திரண்டனர்... இதனிடையே, இளம்பெண்ணின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. அப்போது, அவரது அந்தரங்க பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "சமீபகாலமாகவே 7 மாதங்கள் இவர்கள் உறவில் இருந்துள்ளனர்.. கடந்த செப்டம்பர் 23ம் தேதி, இருவரும் ஓட்டலில் சந்தித்து உறவு கொண்டுள்ளனர்.. பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகும்கூட, அவருடன் தொடர்ந்து உடலுறவு கொண்டிருக்கிறார் இளைஞர்.. இதில்தான் நிலைமை மோசமடைந்துள்ளது..
ரத்தப்போக்கு: ரத்தப்போக்கு வந்ததுமே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தாலும், அந்த பெண்ணை பிழைக்க வைத்திருக்கலாம்.. ஆனால், கூகுளில் சிகிச்சையை தேடுவதிலேயே கிட்டத்தட்ட 60 முதல் 90 நிமிடங்கள் செலவிட்டுள்ளார்.. "உடலுறவின் போது இரத்தப்போக்கு நிறுத்த என்ன செய்ய வேண்டும்" என்று தேடியிருக்கிறார்..
ஆனால் ரத்தப்போக்கு நிற்காததால், நிலைமை விபரீதமாகி கொண்டிருந்தது.. அதற்கு பிறகுதான், பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால், அப்போதுகூட, ஹோட்டலை விட்டு வெளியேறும் முன்பு, அங்கிருந்த ஆதாரங்களை அழித்துள்ளார்.. வலியால் துடிக்கும் பெண்ணை அங்கேயே நிற்கவைத்துவிட்டு, ரூமில் இருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்துள்ளார்.. அதற்கு பிறகே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. இப்படி வரிசையான தாமதம்தான், கடைசியில் ஒரு உயிரையே பறித்துவிட்டது.
விசாரணை: ஆன்லைனில் சிகிச்சையைத் தேடி மணிநேரங்களை வீணடித்து, பெண்ணை கொன்றதுக்காக தற்போது இளைஞரை கைது செய்துள்ளோம்.. அக்டோபர் 4 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. இனிமேல்தான் அவரிடம் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளர்.
மயக்கம்: ஓட்டல் ரூமில் பெண்ணின் ரத்தப்போக்கை பார்த்து பதற்றமடைந்த காதலன், ஆன்லைனில் சிகிச்சைக்கு தேடியிருக்கிறார்.. அப்போது, பெண்ணின் உறுப்பில் ரத்தம் வரவராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார்... ஆனால் உடனே அந்த பெண் மயக்கமடைந்துவிட்டாராம். அதற்கு பிறகுதான், நண்பனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.. முதலில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஆனால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி சொல்லியிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுமே, அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல், ஆன்லைனில் ஐடியா தேடி, துணியை எடுத்து, பெண்ணுறுப்பில் அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றதே, உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிட்டதாக போலீசார் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி நடைபெற்றுள்ளது. முன்னதாக, காதலிக்கு ரத்தப்போக்கு வெளியேறுவது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டாராம்.. அதனால்தான், பெற்றோரும், உறவினர்களும் மருத்துவமனை முன்பு கூடி முழக்கமிட்டு மறியல் செய்தததாகவும் கூறுகிறார்கள்
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications