"உறுப்பு".. ராத்திரி 2 மணிக்கு கிச்சனில், அடுப்பை பற்ற வைத்த "தர்மபத்தினி"..இந்த அக்கிரமத்தை பாருங்க
போபால்: இந்த கொடுமையை பாருங்க.. ராத்திரி 2 மணிக்கு சிக்கனுக்கு போய், சமையல் எண்ணெய்யை அடுப்பில் வைத்து சூடாக்கியிருக்கிறார் இளம் மனைவி பாவனா..!!
மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது மாதவி என்ற நகர்.. இங்கு வசித்து வருபவர் சுனில் குமார்.. இவர், வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் பாவனா.

வெளியூர்: கணவன் வெளியூரில் வேலைபார்த்து வருவதால், விடுமுறைக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து போவார்.. அப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு, லீவில் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது, பக்கத்து வீட்டுப்பெண் சுனிலிடம், "நீங்கள் வீட்டில் இல்லாததால், உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் பேசுகிறார்.. அதை என்னவென்று விசாரியுங்கள்" என்று புகார் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ந்த சுனில், "இதை பற்றி பாவனாவிடம் விசாரிப்பதாக சொல்லியிருக்கறார்..
பிறகு, பாவனாவிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. அதற்கு பாவனா, நான் யாரிடமும் பேசவில்லை என்று சொல்லி சாதித்துள்ளார்.. இதனிடையே, மறுபடியும் சுனில் வீட்டிற்கு வந்திருக்கிறார்.. அப்போது பாவனா, அந்த இளைஞனிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்... இதை கண்ணெதிரே பார்த்த சுனில், மனைவியை கண்டித்தார்.. இனிமேல் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று எச்சரித்தார்.. ஆனால் பாவனா கேட்கவில்லை..
ஆத்திரம்: மறுபடியும் மறுபடியும் போனில் பேசிக் கொண்டேயிருந்ததால், வெறுப்படைந்த சுனில், பாவனாவின் செல்போனை எடுத்து வைத்துக்கொண்டார். அந்த செல்போனை சுனில் எங்கே வைத்திருக்கிறார் என்றும் பாவனாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.சம்பவத்தன்று வழக்கம்போல், சுனில் தூங்க சென்றுவிட்டார்..
ஆனால், செல்போன் இல்லாமல் பாவனால் தூங்க முடியவில்லை.. நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது.. சுனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.. இந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த பாவனா, மெல்ல எழுந்து கிச்சனுக்கு போனார்.. அடுப்பை பற்ற வைத்து, சமையல் எண்ணெயை சூடாக்கினார்...
அதற்கு பிறகு, கொதிக்க கொதிக்க எண்ணெயை கொண்டு வந்து, கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றிவிட்டார்.. தூங்கி கொண்டிருந்த கணவர், வலியால் அலறி துடித்தார். அவர் துடிப்பதை பார்த்ததும், மனைவி வீட்டை விட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார். சுனிலின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் ஓடிவந்தனர்.. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்..
வெந்த உறுப்பு: ஆனால், அதற்குள் அந்த பகுதி 70 சதவீதம் எரிந்துவிட்டது.. பிறகு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. தீவிர சிகிச்சையில் உள்ள சுனிலிடம் வாக்குமூலத்தை பெற்றனர்.. மனைவி மீது வழக்கையும் பதிவு செய்தனர்.. ஆனால், பாவனாவை இன்னும் காணவில்லை. தேடிக் கொண்டிருக்கிறார்கள்... போன் பேசக்கூடாது என்று சொன்னதற்கே இந்த தண்டனையா என்று குவாலியரே மிரண்டு கிடக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications