நாக்கை கரகரன்னு அறுத்து, குளத்தங்கரை கல் மேல வைத்த கணவர்.. தெறித்து ஓடிய ஜனம்.. அப்பறம் என்னாச்சு?
ராய்ப்பூர்: கடவுள் நம்பிக்கை எல்லைமீறி போய்விட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவமனையில்தான் அட்மிட் ஆக வேண்டியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு சம்பவம் நடந்தது.. பூரவ்சரிரா என்ற கிராமத்தை சேர்ந்த சம்பத் சரோஜ் என்ற 40 வயது இளைஞருக்கு கல்யாணமாகி 8 வருடம் ஆகியும் குழந்தை இல்லையாம்.

தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, உபி மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலுள்ள கோயில்களுக்கும் வழிபட்டு கொண்டேயிருந்தார்.. அப்போதும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்ட சம்பத், இந்தியா முழுவதுமுள்ள கோயில்களை சுற்றிவிட்டு, கடைசியாக தன்னுடைய கிராமத்திலுள்ள அம்மன் கோயிலுக்கு வந்தார்..
குழந்தை வரம்: குழந்தை வரம் கிடைத்தால், தன்னுடைய நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்.. சில மாதங்களில் மனைவி கர்ப்பமானார்.. உடனே மகிழ்ச்சியடைந்த சம்பத், அம்மன் கோயிலுக்கு வந்து, பிளேடை எடுத்து தன்னுடைய நாக்கை அப்படியே அறுத்து வீசினார். இதில் அவரது வாயிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது.
இதனை பார்த்த அங்கிருந்த மக்கள், அலறியடித்து கொண்டு சிதறி ஓடிவிட்டார்கள்.. இதனால், சம்பத்தை காப்பாற்ற ஒருத்தரும் அங்கே இல்லாமல் போய்விட்டார்கள்.. ரத்தப்போக்கு அதிகமாகி, ஆபத்தான நிலையில் வலி பொறுக்க முடியாமல் சம்பத் கதறி அழுதார்..
வாழ்நாள்வரை: இதற்கு பிறகே, சிலர் ஓடிவந்து, சம்பத்தை மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்தனர்.. டாக்டர்கள் போராடி சம்பத் உயிரை காப்பாற்றினார்கள்.. ஆனால், தன்னுடைய வாழ்நாள்வரை சம்பத்தால் வாய்பேசவே முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.
பிறக்க போகும் குழந்தையிடம்கூட, வாழ்நாளெல்லாம் பேசாமலேயே இருக்கும் அளவுக்கு, இப்படி ஒரு வெறித்தனமான நம்பிக்கை தேவையா? என்பதே நம்முடைய கவலையாக உள்ளது.
நாக்கு: இப்படி ஆந்திர பிரதேசத்திலும், தன்னுடைய கட்சி தலைவர் வெற்றி பெற வேண்டும் என்று ஒருவர் நாக்கை வெட்டிக் கொண்டார்.. திமுக மறுபடியும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக, பரமக்குடி பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்டதை நம்மால் மறக்க முடியாது.
இதோ சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒருவர் இப்படித்தான் நாக்கை அறுத்து கொண்டுள்ளார்.. துர்க் மாவட்டத்தில், தனாட் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ராஜேஷ்வர் நிஷாத்.. 33 வயதாகிறது..
மந்திரங்கள்: இவர் நேற்று கிராமத்திலுள்ள குளத்துக்கு போனார்.. சில மந்திரங்களை சொன்னார்.. பிறகு திடீரென கத்தியை எடுத்து தன்னுடைய நாக்கை வெட்டி, அந்த அங்கிருந்த ஒரு கல் மீது வைத்தார். பிறகு, அங்கிருந்து அருகிலிருக்கும் கோயிலுக்கு போனார். அதற்குள், வழியெல்லாம் ரத்தம் கொட்டி, கோயில் பக்கத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்துவிட்டார்.. இதைப்பார்த்த கிராம மக்கள், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
இப்போது ராஜேஷ்வருக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. இவர் எதற்காக நாக்கை வெட்டிக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், இவரது மனைவி வாய் பேச முடியாதவராம்.. அவருக்கு பேச்சு வரவேண்டும் என்பதற்காக நாக்கை வெட்டி சிவபெருமானுக்கு காணிக்கையாக செலுத்தியிருக்கிறார் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.
காரணம்: ஆனால் போலீஸார் தரப்பில் சொல்லும்போது, "இதற்கான காரணம் தெரியவில்லை.. நாக்கை வெட்டிக்கொள்ள, ராஜேஷ்வர் நிஷாத் பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம். ஆனால், இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் காரணமாக நடந்ததாக தெரிகிறது" என்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் பெருத்த அதிர்ச்சியை அவ்வப்போது ஏற்படுத்திவிடுகின்றன.. பில்லி சூனியம், நரபலி, பயங்கரமான நேர்த்தி கடன்கள் என அனைத்துமே மூட நம்பிக்கைக்குள்தான் அடங்குகின்றன.. இந்த மூடநம்பிக்கைக்கு வடமாநிலம், தென்மாநிலம் என்ற பாகுபாடு கிடையாது.
சம்பவம்: ஒருவரது பக்தியை நாம் எந்தவிதமான குறை சொல்ல முடியாது.. காரணம், பக்தி என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.. அதேசமயம், அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், உறுப்புகளை அறுத்து கொள்ளும் சம்பவங்களும் சர்வசாதாரணமாகிவிட்டன.. அளவுக்கு மிஞ்சினால், எதுவானாலும் ஆபத்துதான் போல?
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications