அசிங்கமா போச்சு.. மொட்டை மாடியில் கூத்து.. யாரந்த பக்கத்து வீட்டு நண்பர்.. அநியாயமா கருகும் பிஞ்சுகள்
போபால்: 3 வயது குழந்தை மாடியில் இருந்து தவறுதலாக விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.. இது சம்பந்தமாக 2 பேர் கைதாகி உள்ளனர். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், கொலையை செய்தவரே வலிய வந்து உண்மையை சொன்னதுதான்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்தவர் தியான் சிங்... இவர் ஒரு போலீஸ்காரர்.. அங்குள்ள ஒரு ஸ்டேஷனில், கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஜோதி ரத்தோர்.. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29ம் தேதி, இந்த குழந்தை மாடியில் இருந்து, திடீரென தவறி கீழே விழுந்துவிட்டான்.. தலையிலும் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டி உள்ளது..
ஜோதி ஜோதி: இதனால், பதறிப்போன ஜோதி, குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.. தலையில் ரத்தம் கொட்டியதை பார்த்து கதறி கதறி அழுதார்... சொந்தக்காரர்களுக்கு எல்லாம் போனை போட்டு ஒப்பாரி வைத்தார்.. ஆனால், ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோதே, குழந்தை ஆபத்தான நிலையில்தான் இருந்தான்.. டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், சிகிச்சை பலனளிக்காமல் மறுநாளே, அந்த 3வயது பிஞ்சு இறந்துவிட்டான்.
விசாரணை : இப்படிப்பட்ட சூழலில், குழந்தையை கொன்றதாக, ஜோதியின் மீது புகார் கிளம்பியது.. இதையடுத்து, போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.. ஜோதி பற்றின மொத்த வண்டவாளமும் வெளியே வர ஆரம்பித்தது.
அதாவது, போலீஸ்கார கணவர் தியான் சிங்குக்கு, அடிக்கடி நைட் டியூட்டி வந்துவிடுமாம்.. இவர்களது பக்கத்து வீட்டில், உதய் என்பவர் வசித்து வந்துள்ளார்.. இவருடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டு, அதுவே கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது.. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் எல்லாம் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது..
பிளாஸ்டிக் கடை: இதனிடையே, தியான் சிங் பிளாஸ்டிக் கடை ஒன்றை சொந்தமாக நடத்த முடிவு செய்துள்ளார்.. இதற்காக கடந்த ஏப்ரல் 28ம் தேதி, இந்த கடையின் திறப்பு விழாவையும் நடத்தினார்..
இந்த விழாவுக்கு, தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்திருந்தார்.. அனைவருமே, அந்த விழாவில் கலந்து கொண்டு பரபரப்பாக காணப்பட்டனர்.. மொத்த பேரும் பிஸியாக இருந்த நேரத்தில், தன்னுடைய கள்ளக்காதலனை மொட்டை மாடிக்கு வரவழைத்துள்ளார் ஜோதி..
அந்த மொட்டை மாடியிலேயே தனி ரூம் இருக்கிறதாம்.. இந்த ரூமுக்குள் இருவருமே சென்று ஜாலியாக இருந்துள்ளனர்.. அந்த நேரத்தில், அம்மாவை தேடி, 3 வயது குழந்தை மொட்டை மாடிக்கு வந்திருக்கிறான்.. அப்போது, 2 பேரும் உல்லாசமாக இருப்பதை கண்ணெதிரில் பார்த்துவிட்டான். இதனால் பதறிப்போன ஜோதி, பயந்தும் போனார்... இந்த விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடுவானோ என்று பயந்துபோய், மொட்டை மாடியில் இருந்து குழந்தையை கீழே தூக்கி போட்டுள்ளார்..
டிராமா ஜோதி: இதில், அந்த குழந்தைக்கு மண்டை உடைந்து சீரியஸாகிவிட்டது.. அதற்குபிறகுதான், குழந்தை தவறுதலாக கீழே விழுந்துவிட்டதாக ஜோதி டிராமா போட்டுள்ளார்.
இதற்கு பிறகு, இயல்பு நிலைக்கு குடும்பம் திரும்பி உள்ளது.. ஆனால், ஜோதியால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.. நிறைய கெட்ட கனவுகள் வர ஆரம்பித்துள்ளன.. ஒருகட்டத்தில், இறந்துபோன மகனே, கனவிலும் வர ஆரம்பித்துவிட்டான்.. இதனால், பயந்து நடுங்கிய ஜோதி, நாளுக்குநாள் மன உளைச்சலுக்கும் ஆளானார்.. தினம் தினம் தூங்க முடியாமல், நிம்மதியை இழந்து தவித்த நிலையில், ஒருநாள் கணவரிடமே நடந்த விஷயத்தை சொல்லிவிட்டார்..
கள்ள ஜோடி: இதைக்கேட்டு போலீஸ்கார கணவர் மிரண்டுபோய்விட்டார்.. உடனடியாக போலீசுக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார்.. மனைவி மீது புகாரும் தந்தார்.. இதையடுத்து, போலீசார், வழக்குப்பதிவு செய்து, ஜோதியையும், பக்கத்து வீட்டு ஆண் நண்பரையும் கைது செய்துள்ளனர்.. குற்றமுள்ள நெஞ்சே காட்டிக்கொடுத்துவிட்ட நிலையில், ஜோதியிடம் விசாரணை மும்முரமாக நடக்கிறது..
ஊருக்கு ஊரு "அபிராமிகள்" இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இவர்களின் தகாத உறவுகளுக்கு, உலகமறிய பிஞ்சுகளும் இன்னமும பலியாகி கொண்டுதான் இருக்கின்றன.
அபிராமி போன்றோருக்கெல்லாம் இன்னும் தண்டனை தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications