ஹரியானாவில் வெற்றி ஓகே.. ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பிரச்சினை.. இப்போதே வெடித்த குழப்பம்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு காங்கிரஸ் ஆட்சியை அமைத்தால் யார் முதல்வர் என்பதில் இரு தலைவர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கிறது. இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், அங்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலும் பொதுமக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஹரியானா தேர்தல்: ஹரியானாவில் இப்போது பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு நயாப் சிங் சைனி முதல்வராக இருக்கிறார். மறுபுறம் அங்குக் காங்கிரஸ், ஐஎன்எல்டி மற்றும் ஜேஜே பி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. பல கட்சிகள் களத்தில் இருந்தாலும் அங்குக் காங்கிரஸ், பாஜக இடையே தான் கடும் போட்டி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
எக்ஸிட் போல்: அதில் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 90 இடங்கள் நிலையில், 46 இடங்களில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். இன்று வெளியான பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யார்: எக்ஸிட் போல்களில் இருப்பது போலவே முடிவுகள் அமைந்தால் அங்குக் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை அமைக்கும். அதேநேரம் அடுத்த பெரிய கேள்வி காங்கிரஸ் கட்சியில் யார் முதல்வர் என்பது தான்.
பூபிந்தர் சிங்: ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் தான் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. ஹரியானா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்றால் அது சந்தேகம் இல்லாமல் பூபிந்தர் சிங் ஹூடா தான். 1972 முதலே காங்கிரஸில் இருக்கிறார். 2005 முதல் 2014 வரை ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராகவும் இருந்துள்ளார். 2014 மற்றும் 2019ல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போது, பல தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகி மற்ற கட்சிகளுக்குச் சென்றனர். ஆனால், பூபிந்தர் சிங் ஹூடா கடைசி வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார்.
மூத்த தலைவர்.. முதல்வராக அனுபவம் கொண்டவர்... கட்சி மீது விசுவாசம் கொண்டவர்.. இதனால் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு வாய்ப்பு அதிகம். ஆனாலும், அவருக்குத் தான் உறுதியாக முதல்வர் பதவி செல்லும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், அங்குக் காங்கிரஸின் குமாரி செல்ஜாவுக்கும் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.
குமாரி செல்ஜா: குமாரி செல்ஜா ஒரு தலித் தலைவர்.. ஹரியானாவில் தலித் மக்கள் தொகை கணிசமாக இருக்கிறது. இந்த முறை ஹரியானாவில் உள்ள தலித் மக்கள் பாஜகவில் இருந்து காங்கிரஸ் பக்கம் வந்ததில் செல்ஜா பங்கு முக்கியமானது. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் உட்கட்சி பூசல் எழுந்ததாகத் தகவல் வெளியானது. அப்போது பாஜக வெளிப்படையாகவே குமாரி செல்ஜாவுக்கு அழைப்பு விடுத்தது. அந்தளவுக்கு மாநிலத்தில் முக்கியமான தலைவர். ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் தொடர்வேன் என்று குமாரி செல்ஜா உறுதியாக இருந்துவிட்டார். இதனால் அவரும் முதல்வர் ரேஸில் இருக்கிறார்.
இப்படி இரு முக்கிய தலைவர்கள் இருப்பதால் யார் முதல்வர் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு பூபிந்தர் சிங் ஹூடா பதிலளித்துள்ளார். அதாவது ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், முதல்வர் யார் என்பதை டெல்லி தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்தார். மேலும், "நாங்கள் இன்னும் கூடுதலான இடங்களில் வெல்வோம் என்றே எதிர்பார்க்கிறேன். பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது. ஊழல் அதிகரித்துள்ளது. விளையாட்டு வீரர்களும் மோசமாக நடத்தப்பட்டன. அதற்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்" என்று தெரிவித்தார்.
எக்ஸிட் போல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சி வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது. ஆனால், அங்கு முதல்வர் பதவிக்கு யார் வரப் போகிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே, தேர்தல் முடிவுகள் வெளியான உடன் அங்கு மிகப் பெரிய டிராமா அரங்கேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications