Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக பாஜகவிற்கு செக்? ஆளுநராக போகும் தமிழ்நாடு பாஜக "தலை"? டெல்லி போடும் போடு.. அப்படியா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான பாஜக நிர்வாகி ஒருவருக்கு கர்நாடகாவில் ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. தற்போது கர்நாடக கவர்னராக தன்வர் சந்த் கெஹ்லாட் உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் கைவல்ய திரிவிக்ரம் பர்னாய்க் அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். லக்‌ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Who will be the new governor of Karnataka as Congress won the election and Is he a Tamilian from BJP?

சிவ் பிரதாப் சுக்லா- இமாச்சல பிரதேசம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். குலாம் சந்த் கட்டாரியா- அஸ்ஸாம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர்- ஆந்திரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆந்திரா ஆளுநர் பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் - சத்தீஸ்கர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஶ்ரீ அனுசுயா- மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகான் - மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இமாச்சல பிரதேச ஆளுநர்- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- பீகார் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயாஸ்- மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பிடி மிஸ்ரா- லடாக் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பாஜக ஆளுநர் நியமனம்: பொதுவாக பாஜக ஆளாத மாநிலங்களில் கண்டிப்பாக இருக்கும் நபர்களை ஆளுநர்களாக பாஜக நியமனம் செய்வது வழக்கம். இதனால் கடைசியில் ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது வழக்கம்.

உதாரணமாக சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

Who will be the new governor of Karnataka as Congress won the election and Is he a Tamilian from BJP?

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.

பாஜக ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் தமிழிசை - கேசிஆர் இடையிலும், கேரளாவில் ஆரிப் கான் - பினராயி இடையிலும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையில் மோதல் உள்ளது.

தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக அங்கு மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது.

லோக்சபா தேர்தல்:இந்த நிலையில்தான் அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து கிட்டத்தட்ட 4-5 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவில் வயதான..எம்பி தேர்தலில் ஒதுக்கப்பட உள்ள நிர்வாகிகளுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு மட்டும் துணை நிலை ஆளுநராக நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தெலுங்கானாவிற்கு தனியாக புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக ஆளுனர் பதவி என்பது அரசியலில் ரிட்டயர்மெண்ட் மாதிரி. அதாவது அரசியலில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றால் போதும், அவருக்கு ஆளுநர் பதவியை கொடுத்து விடலாம்.

மாநில அரசியலில் தங்களுக்கு ஏற்றபடி செயல்படாத நிர்வாகிகளை இப்படி பாஜக ஆளுநராக போடுவது வழக்கம் . இதன் மூலம் அவர்களின் அதிருப்தியையும் சம்பாதிக்காமல், அதே சமயம் அவர்களை கட்சிக்குள்ளும் வைத்து இருக்காமல் ஓரம் கட்ட முடியும். பலரை பாஜக இப்படித்தான் ஓரம்கட்டி இருக்கிறது. அதன்படிதான் முக்கியமான மூத்த நிர்வாகி ஒருவர் ஆளுநராக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி செய்ய உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக பாஜக இப்படி செய்ய திட்டமிட்டு உள்ளதாம்.

Who will be the new governor of Karnataka as Congress won the election and Is he a Tamilian from BJP?

தேர்தல் முடிவு; எதிர்பார்ப்பிற்கும், பரபரப்பிற்கும் இடையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பொம்மை அங்கே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவர் காபந்து முதல்வராக தொடர்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+