டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்.. ராஜஸ்தானில் சம பலத்துடன் காங்கிரஸ் - பாஜக! சூப்பர் ஓவரில் யாருக்கு வேற்றி?
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அங்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது குறித்து விரிவாக அலசுவோம்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்கான செமி பைனலாக இந்த 5 மாநில தேர்தல்கள் உள்ளன.

அதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாநிலமாக இருப்பது ராஜஸ்தான். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வலுவான வெற்றியை பெற்றாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் சில தொகுதிகள் வித்தியாசத்திலேயே வெற்றியை பெற்று ஆட்சி அமைத்தது.
பாஜகவின் ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவி கிடைக்காததால் அப்போது காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவியதால் அக்கட்சி பெரும்பான்மை இழந்தது. அதன் காரணமாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் இதேபோன்ற நிலையே தொடர்ந்தது. தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று சச்சின் பைலட் எதிர்பார்த்த நிலையில் சீனியரான அசோக் கெலாட்டுக்கு பதவி வழங்கப்பட்டது. இதனால் அவரும் சிந்தியாவை போன்றே போர்க்கொடி தூக்கினார். ஆனால் அவர் பாஜகவில் இணைய விரும்பாததாலும், காங்கிரஸ் தேசிய தலைமையின் தலையீட்டாலும் ஆட்சி கவிழாமல் உள்ளது. ஆனாலும், அடிக்கடி இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இப்படி ராஜஸ்தான் தட்டுத்தடுமாறி சென்று கொண்டு இருக்கும் அசோக் கெலாட்டின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் இதற்கு முன்கூட்டியே தயாராகி தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். ஆளும் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். கர்நாடக தேர்தலில் மேற்கொண்ட ஃபார்முலாவை இதிலும் பயன்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
ஆனால், 5 ஆண்டுகளாக முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே தொடர்ந்து வந்த உட்கட்சி பூசல்கள் காரணமாக ராஜஸ்தான் மக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழல் பாஜகவுக்கு பலனளிக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. காரணம் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜே சிந்தியாவுக்கும் மாநில பாஜக தலைமை, தேசிய பாஜக தலைமைக்கு இடையே உட்கட்சிப் பூசல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இரு கட்சிகளும் சமமான தலத்தில் நின்று போட்டியை எதிர்கொள்கின்றன. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுகின்றன.
ஏபிபி - சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், "200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பாஜக 109 - 119 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 - 88 தொகுதிகளிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 1 - 5 இடங்களிலும் வெற்றிபெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஸ்மால் பாக்ஸ் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பாஜக 90 தொகுதிகளிலும், இதர கட்சிகளில் 6 இடங்களிலும் வெற்றிபெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications