ராஜஸ்தானில் இதை யாருமே எதிர்பார்க்கவே இல்லை.. பாஜக vs காங்கிரஸ்.. வெல்லப்போவது யார்.. புது சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே கட்டமாக வரும் நவ. 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருப்பதால், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் எனப் போராடும் நிலையில், மறுபுறம் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கம் முதலே அனல் பறக்கிறது. இரு கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது.
இதற்கிடையே ராஜஸ்தான் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த லோக்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இப்போது கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
வெல்வது யார்: அங்கு மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க 101 இடங்களாவது தேவை.. அதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அங்கே காங்கிரஸ் கட்சியால் 80-92 இடங்கள் வரை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி 41- 43% வரை வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக அங்கே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. மொத்தம் உள்ள 200 சீட்களில் பாஜக 96-108 இடங்களில் வெற்றி பெறும் என்று லோக்போல் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பாஜக 43- 46% வரை வாக்கு வங்கியைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, மீண்டும் ராஜஸ்தானில் ஆட்சிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள மற்ற கட்சிகள் 13-15% வரை வாக்குகளைப் பெறும் என்றும் இதன் மூலம் 12- 18 சீட்களில் பெறும்.
கடும் போட்டி: இதன் மூலம் இந்த முறை ராஜஸ்தானில் கடும் போட்டி இருக்கும் என்றும் அதில் பாஜகவுக்குச் சற்று வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதும் உறுதியாகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக அப்போது வெறும் 73 இடங்களில் மட்டுமே வென்றது.. அதேபோல சுயேச்சைகள் 13 இடங்களிலும் மாயாவதியின் பகுஜுன் சமாஜ் 6 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications