இரவில் உனக்கு என்ன வெளியே வேலை?: சொல்லி சொல்லி பெண்ணை தாக்கிய கும்பல்
பெங்களூர்: பெங்களூரில் 29 வயது பெண், அவரது வருங்கால கணவர் மற்றும் நண்பரை குடிபோதையில் இருந்த பெண் உள்பட 5 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கூறி தாக்கியுள்ளனர்.
பெங்களூரில் பணியாற்றி வருபவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது வருங்கால கணவர், நண்பர் ஆகியோருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில் குடிபோதையில் இருந்த பெண் உள்பட 5 பேர் அவர்களை தாக்கியுள்ளனர்.

இது குறித்து திவ்யா கூறுகையில்,
நான் என்னுடைய வருங்கால கணவர், நண்பருடன் வியாபாரம் குறித்து பேச பிரபல உணவக உரிமையாளரை சந்திக்க ஹெச்ஆர்பிஆர் லேஅவுட்டுக்கு சென்றோம். எங்கள் வீடுகளுக்கு அருகே அவரது வீடு இருந்ததால் எங்கள் வாகனங்களில் செல்லவில்லை. இரவு 1.40 மணி அளவில் நாங்கள் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.
அப்போது சிவுப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவில் குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து இந்த நேரத்தில் நாங்கள் எதற்காக வெளியே வந்தோம் என்று கேட்டனர். பின்னர் எங்களை பார்த்து அவர்கள் அசிங்கமாக பேசினர். நாங்கள் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினோம். ஆட்டோ டிரைவரோ எங்களுக்கு உதவாமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.
என் வருங்கால கணவரை அந்த 2 பேரும் முகத்திலேயே குத்தினர். சில நிமிடங்களில் ஒரு காரில் குடிபோதையில் ஒரு இளம்பெண் மற்றும் 2 வாலிபர்கள் வந்தனர். அந்த 3 பேரும் காரில் இருந்து இறங்கி வந்து எங்களை தாக்கினர்.
இரவில் இந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்று தெரிந்தும் ஏன் வெளியே வந்தாய் என்று கூறி அந்த பெண் என்னை தாக்கினார். வாலிபர்கள் என் வருங்கால கணவர் மற்றும் நண்பரை தாக்கினர். எனக்கு ரத்தம் வரத் துவங்கியதும் அவர்கள் தப்பியோடிவிட்டனர். இரு சக்கர வாகனத்தின் கடைசி 4 எழுத்துக்கள் நினைவில் உள்ளது. ஆனால் இருட்டாக இருந்ததால் காரின் எண்ணை பார்க்க முடியவில்லை.
அவர்கள் கன்னடத்தில் பேசினார்கள். கல்யாண் நகரைச் சேர்ந்தவர்கள் போன்று. ஒரு பெண் என்னை அடிப்பார் என நினைக்கவில்லை. தற்போது நாங்கள் நலமாக உள்ளோம். மறுநாள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா உள்ளதா என்று பார்த்தோம். ஆனால் ஒரு கேமரா கூட இல்லை என்றார்.
அவர்களை தாக்கியவர்கள் உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் போன்று தெரிகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த 3 பேரையும் தாக்கியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications