35 ஏக்கர் நிலம்.. கேரள அரசிடமே திரும்ப தரும் கோகோ கோலா.. அதிரடி முடிவின் பின்னணி என்ன?
பாலக்காடு: கோகோ கோலா நிறுவனம் பாலக்காடு அருகே பிளாச்சிமடாவில் தனக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, கேரள அரசுக்கு திருப்பித் தர முன்வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால்,விவசாயிகளின் தலைமையில் விரைவில் தொடங்கப்படவுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு தான் இந்த நிலத்தை கோகோ கோலா நிறுவனம் தர முன் வந்துள்ளது.
1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கோகோ கோலா நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,800 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்றுவருகிறது. குறிப்பாக இந்த கோகோ கோலோ நிறுவனம் குளிர்பான விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் கோகோ கோலோ நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன.

இந்நிலையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பிளாச்சிமடாவில் கோகோ கோலோ நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆனால் கோலா நிறுவனம் நிலத்தடி நீரை சுரண்டுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும், உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதை தொடர்ந்து மார்ச் 2004ல் பிளாச்சிமடாவில் உள்ள அதன் யூனிட்டை கோகோ கோலா நிறுவனம் மூடியது.
இந்த சூழலில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பிளாச்சிமடா இடத்தை உழவர்களுக்கான கேட்டு கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. விவசாயிகளின் தலைமையில் விரைவில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆளும் இடது முன்னணி அரசு சார்பில் கேரள மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பிளாச்சிமடாவில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசுக்கு வழங்கும் முடிவை கோகோ கோலா நிறுவனம் எடுத்திருக்கிறது. மேலும், பாலக்காடு பகுதியில் விவசாயிகளுக்கு மாதிரி பண்ணை அமைப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்கவும் கோலா நிறுவனம் முன்வந்தது.

இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜுவான் பாப்லோ ரோட்ரிக்ஸ் ட்ரோவாடோ, 35 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடத்தை அரசுக்கு ஒப்படைக்கும் நிறுவனத்தின் முடிவைத் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications